நான் தேடிய புத்தகம் நீ
நீயே பிம்பமாய் தெரிந்தாய்
நான் தேடிய புத்தகத்தில்..
சிதறப்பட்ட எழுத்துக்களின் வடிவமாய்...
உன் முத்தான பேச்சுக்கள்...
மெய்சிலிர்த்த வரிகள் யாவும்
உன் தீண்டலின் பரிபாஷைகள்...
இடையிடையே தீட்டப்பட்ட
ஓவியங்களில்
நீ அணைத்துக்கொண்ட காட்சிகள்...
கதை முற்றும் நிலையில்
கண்ணீராய் உன் நினைவுகள்...
காலம் கடந்தும் காதல் வாழும்
தலைப்பினில்
நான் தேடிய புத்தகம் நீ...!!