நட்புத் தேன்

நட்பை விவரிக்கச் சொன்னால்
சொல்வேன்... அது

மிளகாய் தின்ற நாக்கில்
விழுந்த தேன்...

நெஞ்சத்து நாட்குறிப்பில்
எழுதி ஒவ்வொன்றாய்
நினைவில் வரும் கற்கண்டு...

மாறுபடும் கருத்துக்களிலும்
ஈர்த்துக் கொள்ளும் காந்தம்...

இடுக்கண்களில் தெரியும்
உதவும் கரங்களின் இதம்...

குசேலர்களுக்கு மட்டுமல்ல
கண்ணன்களுக்கும்... வாழ்வின்
அழகிய அர்த்தங்கள்...

நண்பர்கள் தின வாழ்த்துகள்...
🌹

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (1-Aug-21, 9:49 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 511

மேலே