408

2.8.2021

ஒரு காலத்தில் "வக்கத்தவன் வாத்தியான்" என்று ஆசிரியர்களை ஏளனம் பேசியது இந்த சமூகம்....

இப்போதைய சூழலில்
"தெண்ட சோறு தின்னும் ஆசிரியர்கள்"
வெட்கம் கெட்டவர்கள்
மானம் இல்லாதவர்கள்
கூச்சமின்றி சம்பளம் வாங்குகிறார்கள் ஆசிரியர்கள்
என்று வரித்துக் கட்டி காரி உமிழ்கிறது இந்த சமூகம்....

என் 31 ஆண்டுகால ஆசிரியர் பணியில் எத்தனையோ இடர்களைக் கடந்து சிறப்பாக பணியாற்றி வந்திருக்கிறேன்.... எத்தனையோ குழந்தைகளுக்கு ஆசிரியராக மட்டுமல்லாமல் தாயாகவும் இருந்திருக்கிறேன்.... என்னைப்போன்று எத்தனையோ ஆசிரியர்கள் உள்ளார்கள் ....
இன்றுகூட இருபது ஆண்டுகளுக்கு முன் என்னிடம் படித்த மாணவி தொலைவில் என்னை பார்த்துவிட்டு.... தாயைக் கண்ட சேயைப் போல ஓடி வந்து உணர்ச்சி பொங்க கட்டி அணைத்துக் கொண்டாள்.... மகிழ்ச்சியின் உச்சத்தில் அவள் கண்கள் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தன... அவள் கைகள் உணர்ச்சிப் பெருக்கில் லேசாக நடுங்கின... நான் உண்மையில் நெகிழ்ந்துபோனேன்.....

இந்த ஆசிரியர் தொழிலுக்கு வந்ததற்கு நான் பெருமிதம் கொள்வதா...?
வெட்கப்படுவதா...?
புரியாது மனதிற்குள் புலம்பித் தவிக்கின்றேன்....

ஆண்டவா!இந்த கொரோனா என்ற கோர அரக்கனை அழித்திடு!
அரசே! தகுந்த பாதுகாப்புகளுடன் பள்ளிகளை திறந்திடு!

எழுதியவர் : வை.அமுதா (4-Aug-21, 10:20 pm)
பார்வை : 48

மேலே