சிதையும் மனிதம்

சிந்திக்கும் திறனற்றச் சிற்றெரும்புகள்
பிந்தைய நாட்களுக்காய் சேமிக்கின்றன

பொந்திலே குடிகொள்ளும் கோட்டான்கள்
அந்தியிலே சுதந்திரத்தை சுவாசிக்கின்றன

சந்தியில் திரிகின்ற நாய்கள்
முந்தைய நன்றியை உணர்கின்றன

விந்தையாய் சிற்சில உயிரினங்கள்
சொந்தமாய் வேற்றினத்தைப் பேணுகின்றன

மந்தையாய் வாழ்கின்ற ஆவினங்கள்
சந்தையிலே சிதையாகினும் விலையாகின்றன

அந்தம் ஆதியில்லாதோன் படைப்பில்
மந்தமாய் எவ்வுயிரும் இழிந்திடவில்லை

எந்தன் ஈசனுரு பெற்ற மனிதனோ
அந்தகனாய் சிந்தை சிதைந்து அழிகின்றான்

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (4-Aug-21, 10:24 pm)
பார்வை : 113

மேலே