ஊசி

" ரகு ஒரு வாரமாய் அலைந்து திரிந்ததில், இன்று தான் கொரோனா தடுப்பூசி போட டோக்கன் கிடைத்து லைனில் நின்று கொண்டிருந்தான். இன்னும் ஒரு அஞ்சாறு பேர் தான் அவனுக்கு முன்னால்.

அப்போது திரும்பிப் பார்த்தபோது ஒரு வயதானவர் "என்னை அனுப்புங்க, எனக்கு நிக்க முடியல, ஊசி போட்டுங்க", என்று எல்லோரையும் கெஞ்சிக் கொண்டிருந்தார். "டோக்கன் எல்லாம் கொடுத்தாச்சு,
நாளைக்கு வாங்க" என
விரட்டிக் கொண்டிருந்தார்கள். வாசலிலேயே நின்று கொண்டிருந்தார் அவர்.

அவனுக்கு முன்னே ஒருத்தர் தான் இப்போது. சட்டென்று வெளியே வந்தான், 'டோக்கன் நம்பர் 51' என்று சத்தம் கேட்டது.

அவன் திரும்பிப் பார்த்தான்,
அந்த வயதானவர் இப்போது
ஊசி போட்டுக் கோள்ள உள்ளே சென்றார்.

"நாளை சீக்கிரம் வந்து விடுவோம்" என்று எண்ணிக் கொண்டே
நடந்தான். ஊசி போடாமலே
உடம்பு தெம்பாக இருந்தது.

------------

எழுதியவர் : (6-Aug-21, 10:56 am)
சேர்த்தது : லக்க்ஷியா
Tanglish : oosi
பார்வை : 136

மேலே