காதல் தமிழி

நீண்ட கவிதையில்
இடை இடையே தென்படும்
ஹைக்கூவாய் அவள் மிதுனம்

உரையாடல் நீடிக்கும்
கதையில் மௌன சாட்சியாய்
எடுப்பான அவளின் மந்தாரம்

புதுக்கவிதையில் வரம்புமீறி
வெளிப்படும் திமிராய்
அவளின் எடுப்பான நெஞ்சுரம்

மரபுக்கவிதையில் இதுவரை
கண்டிராத இலக்கிய நயமாய்
புணராத அவளின் கருமச்சம்

சிறுகதையின் வீரியமாய்
கவந்திழுக்கும் அவளின் மதுரம்

இலக்கியங்கள் புனைந்து
தமிழன்னைக்கு சூட்டிய
பூமாலையாய் அவளின் நளினம்

விடுகதைகளின் ஆழம் தெரிந்த
வித்தார கள்ளியாய் அவளின்
வசந்த தென்னகத்து பேச்சு என

முற்றுப்புள்ளி வைக்காத
முத்தக் கவிதையில் அவளோடு
நான் இணைந்திருப்பதே
பெருமகிழ்ச்சி... பெருமகிழ்ச்சி...

எழுதியவர் : மேகலை (6-Aug-21, 6:33 pm)
Tanglish : kaadhal tamili
பார்வை : 153

மேலே