அன்னைக்கு ஒரு கடிதம்

அன்னைக்கு ஒரு கடிதம்.

" பூச்செடியில் பூ இல்லை
புவித்தாயே பூ மாலை உனக்கு சூடி நான் மகிழ - இன்று,
என் வீட்டு பூச்செடியில் பூ இல்லை.

இதயத்தில் கவி இல்லை
இமயவளே கவி மாலை உனக்கு சூடி நான் மகிழ - இன்று,
என் இதயத்தில் கவி இல்லை.

கலைமகளே நீ அருள்வாய்
கவிகள் பல பூத்திடவே,
கவி மாலை உனக்கு சூடி தினம் நான் களித்திடவே, கலைமகளே நீ அருள்வாய்."

அன்னை = புவித்தாய்/இமயவள்/கலைமகள்

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (6-Aug-21, 6:13 pm)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
பார்வை : 72

மேலே