பொருள்

"காய் என்பதற்கு பொருள் உண்டு,
வாழைக்காய் என்றாலும் பொருள் உண்டு.

மரம் என்பதற்கு பொருள் உண்டு ,
சாமரம் என்றாலும் பொருள் உண்டு.

விதை என்றால் பொருள் உண்டு ,
கவிதை என்றாலும் பொருள் உண்டு.

தாய் என்பதற்கு பொருள் உண்டு, அழைத்தாய் என்றாலும் பொருள் உண்டு.

தனியோ, இணையோ, அர்த்தம் இருக்க வேண்டும்,
இல்லையேனில் வியர்த்தமே!."

எழுதியவர் : (7-Aug-21, 7:20 am)
சேர்த்தது : லக்க்ஷியா
Tanglish : porul
பார்வை : 131

மேலே