அறுசுவையில் துவர்ப்பு
நேரிசை வெண்பா
பாரத நாடே அறுசுவை கண்டது
பாரதில் ஒவ்வொன்று மோர்மருந்தாம் -- பாரப்பா
சித்தர் குறித்ததைத் தேடிப் படிபுரியும்.
வித்தகச் சித்தரைக் கேளு
தொடரவி டாதே துரத்திடும் மேகம்
தொடர்ந்துண் ணத்துவர்பைக் கூறு
நாவல் கடுக்காய் அரசுடன் ஆலுடன
பாவற்பிஞ் சும்நெல்லி தான்றியாம் -- சீவலும்
அத்தி தளிராம்மா இத்திமுத் தற்காசு
மொத்தம் மருந்தெனக் கூறு
அறுசுவையும் நோயினை ஓட்டிட உணவில் வைத்தார்
முன்னோர் . அதில் துவர்ப்பு என்பது மேகநோய் என்னும்
நீரிழிவை ஒழிக்க வல்லதாம். அதற்காக நாவற்பழம் கடுக்காய்
ஆலம்வேரில் அரசு குச்சியில் பல் துலக்கல் பாக்கு சீவல்
மாந்துளிர் அத்தி இத்தி முத்தர் காசு என்பன வற்றை உணவில்
சேர்க்க வேண்டும் என்பர். முன்னோர்
.........