ஒளியாம் கடவுளுக்கேது அங்கம்

நேரிசை ஆசிரியப்பா

எந்த ஒன்றிலும் அங்கங் களைப்பார்
உடலுக் கங்கம் மெய்வாய் செவிகண்
மூக்கு வீடு திணைபடை அரசு
கிராமம் நகரம் பெரிய நகரம்
நாடு தேசம் உலகம்
எதற்கும் அங்கம் தேடிப் பாரே

வீட்டில் அங்கம் தந்தைதாய் மக்கள்
மாமியார் மருமகள் மனைவி என்பர்
வீட்டில் சிலதாம் மாமியார் சட்டம்
சிலதில் மருமகள் சட்டம் பிரிவில்
மனைவி வைத்ததே சட்டம்
சம்பா தித்து கொடுப்பான் அடக்கமே

அரசர்க் கங்கம் மலையுடன் ஆறு
நாடும் ஊரும் மாலை
பரிகரி முரசு செங்கோல் என்பதே

நாளுக் கென்று வைத்தது அங்கம்
சொல்வேன் திதியும் வாரமும் நட்சத்
திரமும் யோகம் கரணமும்
வைத்து பஞ்சாங் கம்பல வானதே

அங்க யோகா வென்று எட்டாம்
இயமம் நேமம் ஆசனம் பிராணா
யாமம் பிரத்தியா காரம்
தாரணை தியான முடன்சா மாதியே

போரில் அங்கம் ஐந்து ரதமுடன்
யானை குதிரை காலாட்
படையில் விற்படை சேர்த்திடு வாயே

அயனென் பார்மா லென்பார் சிவமாம்
மகேசன் சதாசிவம் கடவுளின் அங்கமாம்
ஒளியா னவனுக் கேதடா
அருவா னதில்வுரு அங்கம் வேணுமோ


.........

எழுதியவர் : பழனி ராஜன் (10-Aug-21, 5:57 am)
பார்வை : 64

சிறந்த கவிதைகள்

மேலே