பச்சைத் திப்பிலி - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
தாகமுடன் சோபந் தணிக்குங்காண் எவ்வகையின்
மேகமுடன் பித்தம் விலக்குமே - போகமிகும்
நவ்விய ரன்ன நயங்கொடுக்கும் பச்சையாஞ்
செவ்விய மூலச் செயல்
- பதார்த்த குண சிந்தாமணி
தாகம், சோபம், பித்தம் இவற்றை நீக்கி சுக்கிலத்தை விருத்தி செய்து அழகைக் கூட்டும் பண்பு பச்சைத் திப்பிலி வேர்க்குண்டு