மொழி 18 தேசம் 56

மொழியை விடுமின் தேசம் சொல்வேன்
பாரத மொத்தம் பலதையும் பாரு
அங்கம் அருணன் அவந்தி **ஆந்திரம்
இலாடம் * யவனம் ஒட்டியம் கருசம்
கலிங்கம் ***கன்னடம் கண்ணா டமுமாம்
காசம் காஸ்மீ ரக்காம் போஜன் கடாரம்****
குடகு குருகு குந்தள மும்குரு குலிந்தம்
கூர்ச்சரம் கேக்கே யத்துடன் (கேரளம் )
(கொங்கணம் )(கொல்லம் )கோசலம்
சகம்சவ் வீரம் சாலவம் சிங்களம்
சிந்து xசீனம் சூரசேனம் (சோழம்) சோனகம்xx
xxx திராவிடம் (துளுவம் ) xxxxதெக்கணம் நிடதம்
நேபாளம் பாஞ்சா லபப்பரம் பல்லவம்
(பாண்டி )புலிதம் போடம் மகதம்
மச்சம் மராடம் (மலையா )ளமாளவம்
காந்தா ரவங்கவங் காள
விதற்ப தேசமைம் பத்து ஆறே



* யவனம். -. கிரேக்கம்

** ஆந்திரம். தெலுங்கு
*** கன்னடம். கர்நாடகா
**** கடாரம். பர்மா
x சீனம். சைனா
xx சோனகம். இஸ்லாமிய நாடுகள்
xxx. திராவிடம் மராட்டியம் அருகே இருந்தது
xxxx தெக்கணம். மத்திய பிரதேசம்..

அடைப்புக்குள் இருக்கும் நாடான
.சேரநாடே தமிழ் நாடாம் கேரளம் கொங்கனம் கொல்லம் மலையாளம்.....


அடைப்புக்குள் இருக்கும் நாடான
தமிழ் சோழ நாடும் தமிழ் பாண்டி நாடு


56 தேசத்தை இன்றும் தொன்று தொட்டு தெருக் கூத்துகளின்
துவக்கத்தில் சொல்லி அசத்துவதைப் பார்க்கலாம்.

வாழியச் செந்தமிழ் சேரத் தமிழ் நாடாம் கேரளம் கொங்கனம் கொல்லம் மலையாளம்.....
சோழ பாண்டிய தேசமெல்லாம்..

.......

எழுதியவர் : பழனி ராஜன் (10-Aug-21, 10:19 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 27

மேலே