கீரி இறைச்சி - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
கீரி இறைச்சிக்குக் கெம்பீரம் உண்டாகும்
நீரிழிவும் ஏகுமென்பார் நிச்சயமே - வீரியமாஞ்
சில்விஷம்விட் டேகுஞ் சிரங்கு சொறிஅகலும்
பல்லரணை போகும் பறந்து
- பதார்த்த குண சிந்தாமணி
இவ்விறைச்சி பலம், சுக்கிலவிருத்தி இவற்றை உண்டாக்கி வெகுமூத்திரம், சிறுவிடம், நமை, சிரங்கு, சொறி, பல்லரணை இவற்றைப் போக்கும்