மரநாய் இறைச்சி - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

மரநாய் இறைச்சிக்கு வன்கிரந்தி மேகம்
உரமறவே ஓடி ஒளிக்கும் - விரைவாதஞ்
சூலைகன வாதந் தொலையுஞ் சுரம்போகும்
ஞாலமிசை இக்குணத்தை நாட்டு

- பதார்த்த குண சிந்தாமணி

மரநாய் இறைச்சி சிரங்கு, பிரமேகம், குடல் வாயு, சூலை நோய், பெருவாதம், சுரம் இவற்றைப் போக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Aug-21, 2:24 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 52

மேலே