மனதிற்கினியவள்
நிலவு மங்கை
நிறைவாய் தோன்றும்
பெரும் பொழுதினிலே
ஆற்றங்கரை ஒரம்
சயனித்து, உன்தன்
நினைவு தனில்
எனைமறந்து திருந்த
வேளையில் காரிகை நீ
உன்தன் கயல்விழியால்
காதல் மொழி பேசி
என் சிந்தை சிதறும்
நேரம்தனில் என்
கண்ணக்கதுப்பில் நீ
ஒற்றிய உன்தன்
இதழ் சூடு யென்
நெஞ்சில் தீயாய்
என் இமை திறக்கும்
இளம் காலை பொழுதினிலும்