கழுதைப் புலி உவமைகள் தோய்த்து

தலைவாரும் சீப்பதுவே தலைகீழாய் இருந்தார்போல்

தன்சினத்தில் பிடறிமயிர் தழைத்தங்கே கூர்ச்செறியும்

உலைவைக்க சோம்பித்தான் ஊர்ச்சோற்றில் உழல்வார்போல்

ஊனுண்ணி உண்டுமீந்த ஊன்தின்னும் கடுவாயன்

உலையிரும்புச் சூட்டினிலே ஒற்றியதாய் வரிவரியாய்

உடம்பெங்கும் கருங்கோடாய் உள்ளதனால் வரிப்புலியே

அலைந்தாட்டை மேய்ந்திடவே அடவியிலே பற்றிவிட்டே

அதுகொல்ல அலறிடுவர் “அய்யய்யோ” ஊடகம்முன்

ஊனுண்ணி- இறைச்சி தின்னும் விலங்கு ; ஊன்-இறைச்சி

கடுவாயன்-கழுதைப்புலி

எழுதியவர் : ஆதிரை சுப்பிரமணியன் (10-Aug-21, 3:42 pm)
பார்வை : 60

மேலே