ஆதிரை சுப்பிரமணியன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ஆதிரை சுப்பிரமணியன் |
இடம் | : பெங்களுரு |
பிறந்த தேதி | : 13-Nov-1961 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 08-Jun-2014 |
பார்த்தவர்கள் | : 128 |
புள்ளி | : 12 |
nothing more to add
தலைவாரும் சீப்பதுவே தலைகீழாய் இருந்தார்போல்
தன்சினத்தில் பிடறிமயிர் தழைத்தங்கே கூர்ச்செறியும்
உலைவைக்க சோம்பித்தான் ஊர்ச்சோற்றில் உழல்வார்போல்
ஊனுண்ணி உண்டுமீந்த ஊன்தின்னும் கடுவாயன்
உலையிரும்புச் சூட்டினிலே ஒற்றியதாய் வரிவரியாய்
உடம்பெங்கும் கருங்கோடாய் உள்ளதனால் வரிப்புலியே
அலைந்தாட்டை மேய்ந்திடவே அடவியிலே பற்றிவிட்டே
அதுகொல்ல அலறிடுவர் “அய்யய்யோ” ஊடகம்முன்
ஊனுண்ணி- இறைச்சி தின்னும் விலங்கு ; ஊன்-இறைச்சிகடுவாயன்-கழுதைப்புலி
நான் செருப்பு
கடித்திட எனக்கு பல்லை வைத்து
கட்டியே உன்னிடம் கொடுத்தாரா?
அடித் தடுமாறி விழுந்திட நடந்து
அதற்கும் நான் தான் காரணமா?
அடிக்கும் வெயிலில் நடந்தவன் நானே!
ஆயினும் அகத்தின் வெளியே நான்?
அடித்திட ஆயிரம் பொருட்கள் இருந்தும்
அடியேன் ஒருவனே இளக்காரம்!
நொடிந்தால் கூட ஓய்வெனக்கில்லை
நுழைத்து லாரியில்
தொங்க வைப்பார்!!
படியின்மடியில் இருக்கும் என்னை
பட்டி நாயும் குதறிடுமே !
அடியேன் உரிமையாளரும் மாறுவர்
ஆலய, திருமண மண்டபத்தில்!
தடிமனாயிருப்பினும் பொதியெனச்
சுமப்பேன்
தரணியில் மதிப்பார் எவரிங்கே?
நான் செருப்பு
கடித்திட எனக்கு பல்லை வைத்து
கட்டியே உன்னிடம் கொடுத்தாரா?
அடித் தடுமாறி விழுந்திட நடந்து
அதற்கும் நான் தான் காரணமா?
அடிக்கும் வெயிலில் நடந்தவன் நானே!
ஆயினும் அகத்தின் வெளியே நான்?
அடித்திட ஆயிரம் பொருட்கள் இருந்தும்
அடியேன் ஒருவனே இளக்காரம்!
நொடிந்தால் கூட ஓய்வெனக்கில்லை
நுழைத்து லாரியில்
தொங்க வைப்பார்!!
படியின்மடியில் இருக்கும் என்னை
பட்டி நாயும் குதறிடுமே !
அடியேன் உரிமையாளரும் மாறுவர்
ஆலய, திருமண மண்டபத்தில்!
தடிமனாயிருப்பினும் பொதியெனச்
சுமப்பேன்
தரணியில் மதிப்பார் எவரிங்கே?
சொகுசான வாழ்க்கை ஒரு காலத்திலே
சொத்துக்கும் பஞ்சமில்லை சுக போகத்திலே
இரைச்சானே காசையெல்லாம் இழி பழக்கத்திலே
உரைத்தானே தீயவார்த்தை கெட்ட மோகத்திலே
அப்பனும் ஆத்தாவும் எத்தனை சொல்லியும்
அவன் பழக்கத்தை கொஞ்சமும் மாத்தலையே
மாமனும் மச்சானும் எவ்வளவு அடிச்சும்
அவன் அணுவளவு கூட திருந்தலையே
ஆசைப்பட்டு கட்டிக்கிட்ட மாமன்மக ஓஞ்சுப்புட்டா
தன்னைத்தானே வருத்திக்கிட்டு திருத்தமுயன்று கஷ்டப்பட்டா
ஊருசனமும் ஒதுங்கிக்கிச்சு உறவுபூரா ஒதுக்கிடுச்சு
நாட்டாமையா யாருயிங்கே தீர்ப்புசொல்ல வந்திடுவார்
பொறந்த பொண்ணு வாயத் தொறந்து
கேட்டா அவனை ஒரே கேள்வி
அன்றே திருந்தினான் அதுவரைக்காய் வருந்தினான்
மீண
சீக்காளி என்னை
சீக்கிரமாய் குணமாக்க
பணம் பண்ணி வர்ரேன்னு
கொத்தனார் பணியாக
போனாரே போரூர்.
கல்லைத் தூக்கி
கட்டிவைத்த கட்டிடமும்
கல்லைத் தூக்கி
தலையினில் போட்டுச்சே.
கொலையாகிப் பிணமாய்
பணம் பண்ணப்போனவரும்
பாடையிலே
ஏற்ற இறக்கமற்று இவ்வுலகில் எல்லோரும்
மாற்றுக் கருத்துரைக்க முன்வாரா ஈற்றை
எமதர்மன் வந்தே எளிதாய் காட்டும்
சமதர்ம முறைப்ப திறப்பு.
சீக்காளி என்னை
சீக்கிரமாய் குணமாக்க
பணம் பண்ணி வர்ரேன்னு
கொத்தனார் பணியாக
போனாரே போரூர்.
கல்லைத் தூக்கி
கட்டிவைத்த கட்டிடமும்
கல்லைத் தூக்கி
தலையினில் போட்டுச்சே.
கொலையாகிப் பிணமாய்
பணம் பண்ணப்போனவரும்
பாடையிலே
டேவிட்டும் கோலியாத்தும்
ஏசு கிறிஸ்த்து காலம் முதல்
தாவி வந்து காதில் சொல்லும்
பரம்பரைக் கதையா?
சிலி என்றால் தமிழில் மிளகாய்தானே.
கிலிபிடித்தாற்ப் போல் ஸ்பெயின்
சிலியிடிம் சிக்கி சின்னாபின்னாமானதே.
காரம் அதிகம் தான். காலம் மாறினாலும்
டேவிட்டும் கோலியாத்தும்
தாவி வந்து காதில் சொல்வது
பரம்பரைக் கதையா?
காதலுக்கு
உயிர்த்துளி...!
கன்னத்தில் இடும்
ஒத்தடம்...!
காதலின்
வழித்தடம்...!
இதழ்கள் வாசிக்கும்
இனிமையான இசை...!
இதழ்கள் செய்யும்
இதமானத் தட்டச்சு...!
வார்த்தைகளற்ற
வசீகரமான மொழி...!
காதலர்களின்
வலி நிவாரணி...!
இதயம் உள்ளவரை
இது நிலைக்கும்...!
இதயம் உள்ளவரை
இதில் நனைக்கும்...!
சிபாரிசின்றி கிடைக்கும்
செல்லப் பரிசு...!
இன்பத்தின்
அன்பானத் தழுவல்கள்...!
இதழ்களின்
அழகானத் தகவல்கள்...!
சப்தம் போட்டால்
இனி யுத்தம் செய்யாதே
முத்தம் போடு....!
இனி...
மொத்தமும் உன்வசம்
காரணம் முத்தத்தின் சகவாசம்...!
”படைப்புக்கு கருத்துப்போட வாங்க , கருத்துப்போட வாங்கன்னு ” நிறைய விடுகைகள். அனுப்புறீங்களே தோழர்களே....!
ஒரு வார்த்தை
ஒரே வார்த்தை
” நலமா ? உடலும் உள்ளமும் நலமான்னு கேக்குறீங்களா? “
அட இவ்வளவு நீளமா கேட்கலைன்னாலும் பரவாயில்லை.
சுருக்கமா ..H R U ? ... என்றாவது கேட்கலாமே..?
ஏன் பாஸ் இப்படி. ?
சுயநலமாவே இருக்கீங்களே ...!
# காலையிலயே கடுப்பாகுது மைலார்ட்...!