+மீண்டும் வானம்பாடி+

சொகுசான வாழ்க்கை ஒரு காலத்திலே
சொத்துக்கும் பஞ்சமில்லை சுக போகத்திலே
இரைச்சானே காசையெல்லாம் இழி பழக்கத்திலே
உரைத்தானே தீயவார்த்தை கெட்ட மோகத்திலே

அப்பனும் ஆத்தாவும் எத்தனை சொல்லியும்
அவன் பழக்கத்தை கொஞ்சமும் மாத்தலையே
மாமனும் மச்சானும் எவ்வளவு அடிச்சும்
அவன் அணுவளவு கூட திருந்தலையே

ஆசைப்பட்டு கட்டிக்கிட்ட மாமன்மக ஓஞ்சுப்புட்டா
தன்னைத்தானே வருத்திக்கிட்டு திருத்தமுயன்று கஷ்டப்பட்டா
ஊருசனமும் ஒதுங்கிக்கிச்சு உறவுபூரா ஒதுக்கிடுச்சு
நாட்டாமையா யாருயிங்கே தீர்ப்புசொல்ல வந்திடுவார்

பொறந்த பொண்ணு வாயத் தொறந்து
கேட்டா அவனை ஒரே கேள்வி
அன்றே திருந்தினான் அதுவரைக்காய் வருந்தினான்
மீண்டும் வானம்பாடி வாழ்வில் இசைத்த‌தடி...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (1-Jul-14, 9:41 pm)
பார்வை : 137

மேலே