கம்பிக் குடிசைகள்

பணக்கட்டுகளின்
சூழ்ச்சியால்
சீட்டுக்கட்டாய் சரிந்தது
கம்பிகளை நம்பிய குடிசை !

சீமான்களும்
கோமான்களும் தமது மாளிகைக்கு
அடிக்கல்லாக்கினர்
அப்பாவி உயிர்களை !!

புதுப்பது மரணவித்தைகள்
ஆண்டவனுக்கே
சவால் விடுகின்றன !!
அச்சத்தில் அவன் !!

மனதின் அஸ்திபாரம்
சரியில்லை என்றால் சரிவது
அடுக்குமாடி மட்டுமல்ல !!
மனிதமும் தான் !!

எழுதியவர் : பாப்பாரப்பட்டி நாகராஜன் (1-Jul-14, 5:10 pm)
பார்வை : 103

மேலே