அழுகை சாபமல்ல வரமே

இது ஆண்டவன் கொடுத்த சாபம்
என்பதே பலரது எண்ணம்...

ஆனால், அழுகை எனபது
கடவுள் மனிதனுக்கு அளித்த
முதல் பரிசுமட்டுமல்ல வரமும் கூட...

குழந்தை பிறந்தவுடன் அதன்
அழுகைதான் அதன் ஆரோக்யத்தை உணர்த்தும்..

குழந்தையின் பசியை தை உணர்ந்து
பாலூட்ட உதவுவதும் அழுகைதான்...

தனக்கேற்ப்பட்ட சங்கடங்களை
குழந்தை தாய்க்கு உணர்த்துவதும் அழுகைதான்..

குழந்தை வளர்ந்ததும் தன விருப்பங்களை
நிரைவேற்றிக்கொள்வதும் அழுகையால்தான்..

வெற்றி பெறும்போது
வெளிப்படுவதும் அழுகைதான்..

பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு செல்லும்போது
பாசத்தை உணர்வதும் உணர்த்துவதும் அழுகைதான்..

மனிதன் இறைவனடி சேரும்போது
ஈடுகட்ட முடியாத இழப்பை
அழுகையின் மூலமே வெளிப்படுத்துகின்றனர்...

இவ்வாறு,
பிறப்பிலிருந்து இறப்புவரை
மனிதனுக்கு அழுகையானது

சாபமல்ல வரம் என்பதை
உணர்த்திக் கொண்டே இருக்கிறது ...

எழுதியவர் : சந்திர கார்த்திகா (1-Jul-14, 4:57 pm)
பார்வை : 647

மேலே