ஆதிரை சுப்பிரமணியன்- கருத்துகள்

மரபில் மலர்ந்த மாப்பா படித்தேன்.
மரணமில்லா மரபேத் தமிழாய்
படைத்தப் பாப்போல் படைப்பாய் நீயும்
அடையில் தேனை சுவைப்போம் நாமே

நான் ஐம்பது +. எனக்கு உந்துதல் ஒரு நிகழ்வில் வந்தது.நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கையில்
கண்ணதாசன் எங்கள் பள்ளி ஆண்டு விழவிற்க்கு அழைக்கப்பட்டார். அப்பொழுது ஒரு பெரியவர் அவரை அந்த ஊர் விநாயகரைக் குறித்து ஒரு பாட்டு எழுதச் சொன்னார். அவர் உடனே மரபில் சில வினாடிகளில் எழுதிக் கொடுத்து அருகில் நின்று பார்த்துக் கொண்டிருந்த எனக்கு அந்த உந்துதல் (இன்றைக்கும் அந்த தமில் அறிஞர் பாடலைப் (விருத்தப்பா) பாடும் வழக்கம் கொண்டுள்ளேன்.

நான் இந்த தளத்தில் நேற்றையச் சிறுவன்தான். நான் படித்த கவிதைகள் வைத்துப் பாவலர் பலர் தமிழில் முன்னோர் பாடல்களைப் படித்து, பயின்றி ஆக்கினால் , தளம் சிறப்புடையாதாய் விளங்கும். தவறாய்த் தெரிந்தால் மன்னியுங்கள்

சுற்றுலா என்பது சுற்றத்த்தை துறக்கவா??

"நாய்க்கு வேலையில்லை , உட்கார நேரமில்லை" என்ற பழமொழித் தெரியுமா??
இல்லையென்றால் சும்மா உட்கார்ந்து கவனிங்க நாயின் ஒரு நாள் பணியை.
இந்த கேள்விக்கு பதில் கிடைக்கும்

இருவருக்கு மட்டும் தெரிந்தால் இறையன்பு. திரையில் திரிந்தால் தீவிர தப்பு.

கடல் மீன் கதைக்கிறது

எம்மைக்கொணர்ந்து
உணவாகத்தருவோரை
எமனுக்கு உணவாக்கும்
சிங்களப் படைகள்

பின்னிய வலைகளில்
பிய்த்து எறிந்து
பிணைக் கைதிகளாக்கும்
சிங்களப் படைகள்

கடற்க்கரை ஓரம்
கணவர் வருகைக்கு
காத்திருக்கும்
மீனவக் கன்னிகள்

உப்பியக் கடலில்
உப்பினில் இருந்ததால்
விம்மி அழுது
வெம்பி அழுகுவோம்,

ஏனென்றால்,

வேற்று நாட்டில்
வெந்து விருந்தாக
வேண்டாம் என்றே.


ஆதிரை சுப்பிரமணியன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே