கை பேசுதே

நான் தொட்டால்
தப்பாம்.
நடுவர்கள் கூற்று.

மட்டைப் பந்தில்
மட்டையைப் பிடிக்கவும்
முட்டியைச் சுழற்றி
முழுவீச்சாய் வீசவும்
நான் வேண்டும்.

ஆக்கி என்னும் வளை மட்டை
விளையாட்டில் கூட
தேக்கி அடிக்க, வளைத்துயடிக்க
நான் வேண்டும்.

கூடைப் பந்தில் கூட
ஆடைக் குறைவாய்
ஆடும் டென்னிஸ் மற்றும்
மேஜை டென்னிஸ்ஸிலும்
நானின்றி ஆட்டம் இல்லை.

ஆனால்

கால்பந்தில் ஏன்
"கை" யாகிய
என்னில் பந்து பட்டால்
"தப்பாம்?"

எழுதியவர் : (11-Jun-14, 9:51 am)
பார்வை : 243

மேலே