காதல் விதை

உன் உள்ளத்தில்
காதல் என்னும்
விதை விதைத்தேன்
துளிர் விட்டு முளைக்கும்
என்று காத்திருந்தேன் ..!!

ஆனால்
விதை முளைக்கவில்லை
ஏனென்று புரியாமல்
ஏக்கம் கொண்டேன் ..!!


பிறகு விதைப்பது எல்லாம்
முளைப்பதில்லை
என்று ஏக்கம் கொள்ளும்
விவசாயிப்போல்
சமாதானம் கொண்டாலும் ...!!

வானம் பார்த்து
ஏங்கும் பூமியைப்போல்
ஏக்கத்துடன்
காத்திருக்கிறேன் ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (10-Aug-21, 11:54 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 697

மேலே