மாசிபத்திரி - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
(‘ளி’ ‘வி’ இடையின எதுகை)
புளிப்புந் துவர்ப்பும் பொருந்தியிருந் தாலுந்
தவிர்த்தவாய் வைக்கனலைச் சாடும் - நெளித்த
வலிதனைவிட் டோட்டுமட மாதேநீ கேளாய்
வலிமாசிப் பத்திரிதான் வாழ்த்து
- பதார்த்த குண சிந்தாமணி
இது வாத நோய், வெப்பம், ஐவகை வலி இவற்றை நீக்கும்