மருக்கொழுந்து - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

கண்ணிலுறு தோஷங் கபஞ்சூ(டு) இவைபோக்கும்
ஒண்அனல்கைப் புக்காரம் உள்ளமரும் - மண்ணிற்
கொழுந்தம் மருக்குணத்தைக் கொண்டிருந்த போதுந்
தழைந்தபசி வன்மைதருஞ் சாற்று

பதார்த்த குண சிந்தாமணி

கைப்பு, காரம், வெப்பம் கொண்ட இம்மருக்கொழுந்து கண்படலம், கபதோடம், உட்காங்கை போன்ற கண்தோஷங்கள் இவற்றை நீக்கும்; நல்ல பசியை உண்டாக்கி பலத்தையும் கொடுக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Aug-21, 8:14 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 31

மேலே