முத்து அணிகலன் அணிய
நேரிசை வெண்பா
அத்(ஸ்)திசுரம் சோபை யருசிதுர் பலங்கண்நோய்
பித்தவிடஞ் சீததளநோய் பேசுசயஞ் -- சத்தத்
தயிரிய நட்டத்தோடு தாதுநட்ட மும்போம்
முயிறுநன் முத்திருந்தா லோது
ஜீவரத்தினம் என்கிற முத்தினால் அஸ்தி ஜுரம் அரோசகம் கண் நோய்
அநேக சுகம் மெலிவு அக்னிவிழலும் தாதுவிழலும் போகும் சப்திக்கின்ற
இருமல் நீங்கும்.

