ஒளவையின் கூர்மை அறிவு
10/8/2021 ஒளவை யின் நினினைவு நாளாம்
ஒருசமயம் ஒளவை ஒரு வீட்டின் திண்ணையில் உட்கார்ந்திருந்தார்
அந்த சமயம் மன்னர் வீதிவழிப் போக ஒளவை தன் ஒருகாலை
மடக்கினாராம். இதை ஒட்டக் கூத்தர் கவனிக்க அச்சமயம் புகழேந்தி
வீதியைக் கடக்க ஒளவை பிராட்டி தன் இரு காலையும் மடக்கினாராம்
சரி நாம் கடக்க ஒளவை செய்வதை அறிவோ மென்று ஒளவையைக்
கடந்தாராம். உடனே ஒளவை தன் இருகாலையும் நீட்டிக்கொண்டாராம்.
உடனே ஒளவையிடம் ஒட்டக்கூத்தன் சென்று ஒளவை க்கிழவியே
நான் செல்ல எதற்கு இருங்காலையும் நீட்டினாய் மன்னர் போக ஒரு
காலை மடக்கி புகழேந்தி ப் போக இருகாலையும் மடக்கிய தேன் என்று கேட்க?
அதற்கு ஒளவை சொன்னாராம் நாட்டு மன்னன் என்பதால் மரியாதைக்காக
ஒருகால் மடக்கினேன். புகழேந்தி பெரும்புலவன் என்பதால் அவருக்கு
மரியாதை செய்ய இருகால் மடக்கினேன். ஆனால் நீ சாதாரண புலவன் என்பதால்
இருகாலையும் நீட்டினேன் என்றாளாம். உடனே ஒட்டக்கூத்தன் நான் புகழேந்தி க்கு
சம்மானவன் என்னை வேண்டுமானால் சோதித்து பார் என்றானாம்
உடனே ஒளவை சரி ஈற்றடியில் மதியென்ற சொல்லுக்கு நிகராக மூன்று சொல்
வரும்படி சொல் பார்ப்போம் நீ பெரிய புலவன் என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன்
என்றாராம். அதன்படி கீழே யுள்ள அறுசீர் விருத்தத்தைப் பாடினான் ஒட்டக்கூத்த்ன்.
அதுதான் இது
வெள்ளத் தடங்கா சினவானை
"""""வேலிக் கமுகின் மீதேறித்
துள்ளி முகிலைக் கிழித்துமழைத்
*****துளியோ டிறங்குஞ் சோணாடா
கள்ளக் குறும்பர் குலமறுத்த
****கண்டர் வண்டர் கோபாலா
பிள்ளை மதிகண் டப்பேதை
******பெரிய மதியு மிழந்தானே
உடனே ஒளவை யார் ஒட்டா ஒருமதி கெட்டாய் என்று சிலேடை யாய் மதியில்லா
ஒட்டனென்று கூறி நகைத்தாளாம்
உடனே கூத்தன் புகழேந்தியையும் சோ அப்போது தெரியும் என்றாராம்.
ஒளவையும் அவ்வாறே புகழேந்திaயை அழைத்து நீரும் அவ்வண்ணமே
பாடக்கடவீர் என்று பணிக்க
புகழேந்தி பாடிய பாடல் இதுவே
பங்கப் பழனுத் துழுதழவர்
*****பலவின் கனியைப் பறித்ததென்று
சங்கிட் டெறியக் குரங்கிளநீர்
*****தனைக்கொண் டெறியுந் தமிழ்நாடா
கொங்காக் கமரா பதியளித்த
*****கோவே ராச குலதிலகா
வெங்கட் பிறைக்கும் கரும்பிறைக்கு
"""""மெலித்தப் பிறைக்கும் விழிவேலே
புகழேந்தி வெட்கி தலை குனி்ந்தாராம்
இதைப்பற்றி வீராசாமி ரெட்டியார் என்ற தமிழ் ஆசான் 1941 இல்
தான் எழுதிய விநோத ரச மஞ்சரி எனும் நூலில் குறித்துள்ளதை
சோதித்து அறியலாம்
....

