நயனுள கன்னி யப்பனார் நாமம் நன்குறவே - கலித்துறை

கலித்துறை
(விளம் மா விளம் மா காய்)

தயையுடை யானைத் தானென அகந்தை தானில்லா
இயனெறி யானா யென்றுமே நல்ல இயல்புடனே
பயனுள யாவும் பார்த்துமே யாண்டும் பாலிக்கும்
நயனுள கன்னி யப்பனார் நாமம் நன்குறவே!

- வ.க.கன்னியப்பன்

எந்தையின் பெயர்: திரு.வ.ச.கன்னியப்பன்

எ.காட்டு:

கலித்துறை
(விளம் மா விளம் மா காய்)

நன்றுடை யானைத் தீயதி லானை நரைவெள்ளே(று)
ஒன்றுடை யானை யுமையொரு பாக முடையானைச்
சென்றடை யாத திருவுடை யானைச் சிராப்பள்ளிக்
குன்றுடை யானைக் கூறவென் னுள்ளங் குளிரும்மே 1

- 098 திருச்சிராப்பள்ளி, முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Aug-21, 10:13 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 25

மேலே