நிறைவான காதலே
அன்பே கயல்விழி உன்னைக் கண்டு
என் கருவிழி முழுதும் நிறைகிறதே
பட்டென்று நீ பார்க்கும் பார்வையிலே
சட்டென்று என் மனம் சாய்கின்றதே
கலகல என பேசும் உன் பேச்சினிலே
சகலதும் மறந்து மயங்கிப் போகிறேனே
உன்னை நான் காணாமல் இருந்திருந்தால்
காதல் என்பதை அறியாமல் இறந்திருப்பேன்
இந்த பிறவியின் பயனை அடைந்திடவே
உன் காதல் எனக்கு போதுமடி
எந்தன் அருகில் நீ இருந்தால்
மீதி ஜென்மங்கள் எனக்கு தேவையில்லை