ஒரு சிறு கீற்று
ஒரு சிறு கீற்று
_______________________________ருத்ரா
அவள் பார்வையின்
ஒரு சிறு கீற்று
என்னைத்தீண்டியதாய்
உணர்ந்தேன்.
அப்புறம் என்ன?
வானம் கூட ஜாங்கிரி பிழிந்து
வாயில் ஊட்டியது.
விண்மீன்களின் தூசிக்கூட்டம்
எல்லாம்
என் தலைமுடி தோறும்
மணிமகுடம் தரித்து நின்றது.
அட!
அந்த விடியல் சூரியன் இனி
யாருக்கு வேண்டும்?
அவள் இதழ் கூட
பளிச்சென்று
என் இதயம் நுழைந்து
ஒரு பூத்தையல் போட்டதாய்
புல்லரித்துபோனேன்.
இதை இன்னும்
எழுதினால்
எழுத்துக்கள் கூட
கரும்பு வில்லாய்
இனி
என் மீது அம்பு மழை பெயும்.
_____________________________________