குயிலை காணாமல்
குயில் போல் கூவிய
இனிமையான
குரலை கேட்டு
கண் விழித்தேன்...!!
ஆடாத என் மனமும்
மயில் போல் ஆடியது..!!
குயில் போல்
கூவிய குரலின்
சொந்தக்காரியை
தேடியது
என் கண்கள்...!!
கூவிய குயிலை
காணாமல்
ஆடாத மயிலாக
என் மனம் தவிக்குது..!!
--கோவை சுபா