ஊடல்

ஊடல்

காற்றே நீ சென்று வா,
காதலியைக் கண்டு வா,
கள்ளி அவள் சென்றதேன்
கேள்,
கள்வன் இவன் துயில் இழந்தான் சொல்.

பள்ளி முதல் பழகியவள்,
பருவம் முதல் அழகு கொண்டாள்,
பார்ப்பவர் மனம் கொள்வாள்,
பாவை மனம் இரங்குமோ
கேள்.

காற்றே நீ விரைந்து செல்,
காதலியைக் கூட்டி வா.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (12-Aug-21, 1:23 pm)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
Tanglish : oodal
பார்வை : 71

மேலே