தாத்தாவின் கோவணம்
தாத்தாவின்
பழை வேட்டி
வியர்வை வாசம்
உழைப்பின் சொச்சம்
உதிரத்தின் உலர்ந்தவடு
வறுமையின்
அம்மணத்தைமறைத்த
அற்புதபட்டு
இறந்தக்கால
நியாபகத்தின்
நிகழ்காலவலி
தாத்தா
உன்னிடம்
தா தா என்று கேட்டதில்
கோமணத்தைக்கூட
கொடுத்துவிட்டு சென்றாய்
பின்னால்வரும்
சந்ததியின்
அம்மணத்திற்கு
ஆடையாக