குர்ர்ர்
"யேண்டி சாப்பிடாம வந்துட்டே"?.
"எப்படி சாப்பிடறுது? , எங்க போனாலும் பின்னாலேயே வந்துடுறான். எப்படி தான் தேடி கண்டு பிடிப்பானோ?".
" ஹம்ம்.."
" சாப்பிடும் போது, பின்னால வந்து மண்டைய மண்டைய ஆட்டுரதும். அங்கேயே சுத்திகிட்டே இருக்காண்டி"
" உன்ன ரொம்ப பிடிச்சுருக்கு போல"..
" நீ வேற... நான் கண்டுக்காம போனா, பக்கத்துல எவ இருந்தாலும் அங்கேயும் போய் அதயே பன்றான். "
" உனக்கு பிடிக்கலயா"
" எப்படிடி? இப்பதான் எனக்கு ரெண்டு பிள்ளைங்க பொறந்துருக்கு...".
"சரிடி...அங்க பாரு. வேணி ஆண்டி அரிசி போட ஆரம்பிச்சுடாங்க"..
அந்த இரண்டு புறாக்களும் , வீட்டின் முன் வீசிய அரிசிகளைக் கொத்தி தின்ன பறந்து சென்றன. மேலும் சில புறாக்களும் அங்க பறந்து வந்தன...
குர்ர்ர்.....
#siven19