பாகற்காய் இனிக்கிது
முகத்தை அகண்ட தொப்பியால் மூடிக்கொண்டு, தன் பாகற்காய்ப் பந்தலின் கீழ் படுத்து ஓய்வெடுத்தான் இலங்கோ. அடுத்துச் செய்ய வேண்டிய வேலைகளை மனத்திரையில் அடுக்கிக் கொண்டான். சற்றுமுன் உண்ட சாம்பார் சாதம், பொரித்த முட்டையும், தனக்கு மிகவும் பிடித்த தன் தோட்டத்தில் பறித்த பாகற்காய்ப் பொரியலும் அவப்போது வாய் நினைவு பட்டுத்தியது. சுவையான உணவு. பாகற்காய், காய்கறிகளில்
இலங்கோ அதிகம் விரும்பும் ஒன்று. சோற்றில் எதை ஊற்றினாலும், பொரித்த பாகற்காய் முடியும் வரை நன்கு உண்பான் இலங்கோ. ஆனால், ஏன் பலருக்கு இதன் மகிமை புரியவில்லை என அவப்போது சந்தையில் இதனை விற்கச் சிரமம் படும்போது யோசிப்பான்.
"பிள்ளைங்க சாப்பிட மாட்டாங்க தம்பி", " அப்படியே வெச்சுருவானுங்க", " ஹூஹும், இறங்கவே இறங்காது, "நாகட் தான் முப்பது நாளைக்கும் திம்பானுங்க". இவை, தன் வாடிக்கையாளர்கள் அவப்போது சொல்லும் 'customer feed back'. "கேரட் கூட பிரட்டினா, பாகற்காய் கசக்காது" எப்போதோ எங்கேயோ படித்து விட்டு தன் பாகற்காய்களை இவர்களுக்கு விற்பான் இலங்கோ. "யேண்டா இந்த கசப்பின் ருசி உங்களுக்குத் தெரிய மாட்டிங்கீது" என இப்பிள்ளைகளை நினைத்துக் கடிந்து கொள்வான். "கசக்கிற இதே போய் யேண்டா நாங்க திங்கனும்" என இப்பிள்ளைகள் இதை வாங்கிய பெற்றோர்களைத் திட்டுவார்கள், 1000 மருத்துவ குணம் கூறி,கூவி கூவி விற்றாலும் விலையும் ஏற்றம் இல்லை, விற்று முடிப்பதும் சுலபம் இல்லை.
மிதி பாகற்காய், பெரிய பாகற்காய் என இரண்டாக இருந்தது, பங்கலா பாகற்காய் என மூன்றாக பிரிந்தது. மிதி பாகற்காய் போல் சிறுத்தாலும், நீண்டு இருந்தது இந்த புதிய வருகை. நல்ல ருசியும் கொண்டது. ஆனால், தன் தோட்டத்தில் தனக்கு பிடித்த அதே மிதி பாகற்காய் தான் இலங்கோ நட்டுவந்தான். ஆப்பிரிகாவில் கண்டெடுக்கப்பட்ட பாகற்காய், கேரளாவில் முக்கியமான காய். அதனால் என்னவோ, வடக்கில் பல மாநிலங்களில் இதை கரேலா என்றே அழைக்கின்றனர்.
கொஞ்சம் பழுத்தாலும் கசப்பு குறைந்து வீச வேண்டி வரும். விதைகளை எடுத்து விட்டு மண்ணுக்கு உரமாக்கி விடுவான் கவலையாக. சிறுவயதில் சுயமாக நட்டு, அதைச் சொந்தமாக நருக்கி, மஞ்சள் கலந்து பொரித்து உண்டதால் வந்தது இலங்கோவிற்கு இந்த கசப்பான காதல். அவப்போது வேறு காய்கறிகள் நட்டாலும், பாகற்காய் பந்தல்தான் தன் தோட்டதில் அதிகம் இடம் வகிக்கும்.
ஓய்விலிருந்து எழுந்த இலங்கோ, மீதம் உள்ள பாகற்காய்களைப் பறித்து கூடையில் நிரப்பினான். அந்தியில் நீரைப் பாய்ச்சினான். எத்தனை முறை கண்டாலும், கனடாவின் தேசியக் கொடியில் காணும் 'maple leaf' இலைபோல் இருக்கும் இதன் இலைகளைக் கண்டு ரசிப்பான். சிறு சிறு மஞ்சள் பூக்கள். சிறிதும் பெரிதுமாய் இருக்கும் காய்கள். சிறு காயாக இருக்கும் போது, அதன் நுனியில் பெண்களின் கொண்டையில் இருக்கும் பூ போல் ஒரு சிறு பூ என ரசித்து பார்ப்பான். நல்ல அழகான பாகற்காய்கள் தனக்கு எப்போதும் எடுத்துக் கொள்வான். இனிப்பு நீர் நோயாளிகள் சிலர் இவனிடம் வாடிக்கையாக வாங்கி ,சூப் செய்து பருகுவார்கள். அவர்களுக்காக எப்போதும் பூச்சின் கடியின்றி தனியாக 6-7 காய்களைக் கட்டி வைத்திடுவான்.
ஒரு நாள், மாஞ்சிவப்பு நிறத்தில் அழகான கைப்பாதம் அளவில் கீழாக இலைகளின் இடையில் தப்பித்து மறைந்துப் பழுத்திருந்தது. பறிக்க தவறவிட்டதை என்னி அதை அப்படியே விட்டுவிட்டான். மறுநாள் காலை , அதன் நினைப்பு வந்தது. என்ன ஆச்சிரியம்? பூபோல் அந்த பாகற்காய் மலர்ந்து அதன் விதைகளை இரத்த சிவப்பு நிற உறைகளில் அணிந்து ஆங்காங்கே ஒடிக்கொண்டிருந்தன. யாருக்குத் தன்னை விளம்பரப்படுத்துகிறது எனத் தெரியவில்லை. அதன் விதையை எடுத்து வாயில் இலங்கோ சுவைக்க , அது இனித்தது. பழுத்த பாகற்காயோ கசக்காது மற்ற காய்போல் இனிப்பு கலந்த துவர்ப்பைத் தந்தது. இதுவரை, பழுத்த பாகற்காய்களை வீசியதை எண்ணி வருந்தினான். பழத்த பாகற்காயை தன் தாயாரிடம் சமைக்கச் சொல்லி , சந்தைக்கு வருவோருக்கு கொடுத்து பழக்கினான். பழுத்தாலும் விற்று தீர்ந்தன இலங்கோவின் புதிய கண்டுபிடிப்பு.
நாளுக்கு நாள் பெருகும் தன் பாகற்காய் வியாபாரத்தை என்னி மகிழ்ந்தான். பழுத்த மாங்காவை மாம்பழம் என அழைப்பதுபோல், பழுத்த பாகற்காய்க்குப் புதிய பெயரை யோசித்த படி, தன் பந்தலின் நிழலில் ஓய்வெடுத்தான். ஒரு 'lady bird' அவன் சட்டையிலிருந்துப் பறந்துச் சென்று இலைகளில் இறங்கியது.
பாகற்காய் இனிக்கிது...
#siven19