சக்ரிவோட்ச் டி லெஜெண்ட்

"தனியாக வந்து மாட்டிகொண்டாய் , சக்ரிவோட்ச்!!! ஹ! ஹ! ஹ!" பலமாக சிரித்தான் மிற்றிபெக். மக்களைக் கொடுமை செய்யும் கெட்டவன்.

"அது மட்டும் நடக்காது மிற்றிபெக். நான் உன்னிடம் அகப்பட மாட்டேன்" என்று கூறி விட்டு, சக்ரிவோட்ச் தன் லேஸர் துப்பாக்கியை எடுத்து சுட ஆரம்பித்தான். பச்சை வர்ண ஒளி மிற்றிபெக் மீது பட்டது. மிற்றிபெக் , தனது வலது கையால் தடுத்து விட்டு, தோலில் பொருத்தி இருந்த இயந்திரத் துப்பாக்கியால் சக்ரிவோட்ச் மீது சுட்டான். சக்ரிவோட்ச் , தனது இயந்திர இறக்கைகளைத் திறந்து மேல் நோக்கி பறக்க....

" ஜானி, வந்து எடுத்துக்கோ" என தன் இரண்டு வயது மகனை அழைத்தாள் ரெஜினா. கையில் , சற்றுமுன் பொரித்த சமோஸா.
விளையாடிய பொம்மைகளைக் கீழே போட்டு விட்டு ஜானி ஓடிவிட்டான்.

மயங்கிய நிலையில் சக்ரிவோட்ச் தரையில்.
மீண்டும் போர் தொடருமா?
காப்பாற்ற படுவார்களா அர்பாரகஸ் மக்கள்? சக்ரிவோட்ச் மீண்டு எழுவானா?

ஒரு கையில் சமோசாவுடன் வந்தான் ஜானி. போர் மீண்டும் தொடங்கியது.

#siven19
சக்ரிவோட்ச் டி லெஜெண்ட்.

எழுதியவர் : Siven19 (16-Aug-21, 9:03 pm)
சேர்த்தது : siven19
பார்வை : 91

மேலே