பருப்புவடை கோபால்

" நாலு பருப்பு வட, ரெண்டு உளுந்து வட" என்ற சிறுவனுக்கு கேட்டதையும், "சட்னி வைக்கவா" என்று கேட்டு கட்டி கொடுத்தார் கோபாலசாமி.

'பருப்புவடை கோபால்' என்றால், அந்த
வட்டார மக்களுக்குத் தெரியாமல் இருக்காது என்றே சொல்லலாம். 30 ஆண்டுகள் நெருங்குகிறது கோபாலசாமியின் வடை விற்பனை. மெல்லிய உடல், வெள்ளை மீசை, கோடு போட்ட கைலி, அரக்கை சட்டை, தோலில் துண்டுடன் எப்போதும் விநாயகர் கோயிலின் முன் நண்பகல் தொடங்கி மாலை வரை தன் சட்டி பல வடைகளைப் பொரித்து கொண்டிருக்கும்.

அரைத்த மாவில் சேர்க்க, வெங்காயத்தையும் பச்ச மிளகாய்களையும் நருக்கி கொண்டிருந்தார். அப்போது,
" Can I try one " என்று குரல் கொடுத்தான் அங்கு வந்த ஒரு வெளிநாட்டைச் சேர்ந்தவன். பேசும் ஆங்கிலம் , இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவன் போல் இருந்தது. தன் கையில் கைப்பேசியைக் கைப்பிடி ஒன்றில் பொருத்தி, அதைப் பார்த்தவாறு காணொளியைப் பதிவு செய்துகொண்டிருந்தான்.
பேசிய அவன், சூடான பருப்பு வடை ஒன்றை எடுத்து சிறு துண்டாக பிட்டு வாயில் வைத்தான்.
" What is this? " என்ற கேள்விக்கு வடை என்றார் கோபாலசாமி.
" It's vegetarian right?" என்றதும் ஆம் என்பது போல் தலையாட்டி விட்டு, " This is Indian nugget " என்று வடைக்கு ஆங்கிலப் பெயர் சூட்டினார்.
" Very nice " என்று கூறிவிட்டு தன் கைப்பேசியில் சில பல தகவல்களைப் பதிவு செய்து கொண்டே தனக்கு வடைகளை வாங்கிக் கொண்டு கோயில் உள்ளே சென்றான். கடைசியகத் தனது வடையை யார் பாராட்டினார்கள் என மறந்து விட்டார் கோபாலசாமி.
இருந்தாலும் உள் மனதில் ஒரு மகிழ்ச்சி.

இது வரை எந்த நாளிதலிலும், 'Facebook' போன்ற சமூகத் தளத்திலும் தன்னுடைய வடையோ தன் கடையோ வந்ததில்லை. சில நாட்களில், தான் செய்த வடையின் காணொளி, அந்த வெளிநாட்டு பயணியின் 'YouTube' இல் 20 லட்சத்தைத் தாண்டி காண்போர் எண்ணிக்கைப் போய்க் கொண்டிருந்தது.
பருப்புவடை கோபால், அமைதியாக மீதமுள்ள புதினாச் சட்டினியைக் கிண்டி மூடிவைத்தார். கோயில் மணி அடிக்க, அங்கிருந்த புறாக்கள் பறந்து எங்கோ சென்றன.

#Siven19
பருப்புவடை கோபால்

எழுதியவர் : Siven19 (17-Aug-21, 12:20 am)
சேர்த்தது : siven19
பார்வை : 100

மேலே