ரதி மலரோடு தமிழ் மடல்

எழுத்துக்கூட்டி இசைத்தமிழ்
படித்துவிட காதுமடல்
மிகமென்மையாய் கூசும்

இலக்ககணப் பிழையை
கண்கள் பார்த்துவிட
முற்றுப்புள்ளிகள் இரண்டும்
தொடர்ந்து முன்னேறிச் செல்லும்

அசையும் அசையா
சீர்கள் எல்லாம் தேனூறும்
பாலூறும் தமிழ் வாசம் வீசும்

ஆயுத எழுத்தை உள்ளங்கை
தாங்கிக்கொள்ள அரிதான
அடிநாதம் இசையாய் மிஞ்சும்

எதுகையும் மோனையும்
சிரித்த முகமாய் வரவேற்க
செவ்விதழ்கள் தாம்பூலம் சுரக்கும்

அருஞ்சொற்பொருளாய்
உள்ளம் அடிக்கடி கேள்வி கேட்க
ஒப்பனை இல்லாத நிலையிலும்
தமிழின் வளம் மிகுந்து மருகும்

நான் பொய்தான் சொல்கிறேன்
உன் பதிலை எதிர்ச்சொல்லாய் எதிர்பார்க்கிறேன்

உன்னால் நானும் நாண வேண்டும்
உன் பதிலால் தமிழும் நாண வேண்டும்...

எழுதியவர் : மேகலை (19-Aug-21, 12:42 pm)
பார்வை : 256

சிறந்த கவிதைகள்

மேலே