தேவதை வம்சம் நீயோ
தேவதைகள் எல்லாம் எழுத்தின்
வடிவமென நானும் நினைத்திருந்தேன்
உன்னைக் கண்ட பின்னே
எழுத்துக்கும் பஞ்சமென அறிந்துகொண்டேன்
சூரியனையே பூமி சுற்றுகிறதாய்
காதில் பூ சுத்துது விஞ்ஞானம்
பூமியின் தேவதை உன்னை பார்த்திடவே சூரியன் பூமியை சுற்றுவதே மெய்ஞானம்
இருளிலும் அழகியை ரசித்திட தான்
நிலவுக்கு ஒளியூட்டி அனுப்புகின்றான்
நிலவிடம் நீயும் ஒளிவாங்கி
அமாவாசையிலும் நிலவாய் ஒளிருகின்றாய்