வெள்ளை மழையே
வெள்ளை மழையே
மஞ்சள் வெயிலே
மின்னும் மின்மினியே
வா வா..
காணும் கண்மணியே
வா வா...
வானெல்லாம் வெண்மேகம்
பூமியெல்லாம் பூமழை
கார்காலக் குளிர்ப்பதக் காலைவேளை
கண்டேன் முல்லைமுகம் அவளை
உறையும் கரையும் பனிமழை
பொழியும் ஒழியும் வெயில்மழை
அதுபோலும் விழுமே காதல்மழை...
தென்றல் உரசும் !
மணம் வீசும் !
மையல் சேருமே மனசோரம்..
இதழினிலே தந்த முத்தம்தரும்
மழையினிலே நனைந்த இதம் !
மயில் சாயல்தான்
உன்னழகு..
நிலவின் பிம்பம்தான்
உன்னழகு..
வானவில் வண்ணமும்தான் உன்னழகு..