காதல் பாக்கியம்
ஆத்திபூ போல் பூத்தவளே
என்னை அரச வைத்தவளே
ஆடி காற்றில் பறக்க வைத்தவளே
காதலை எனக்கு கற்று தந்தவளே
அம்மி மிதித்தவளே அருங்கதியை
பார்த்தவளே
என் இதயத்தில் வாழ்பவளே
வாழ்க்கை துணையாய் வந்தவளே
முழுமதியாய் நின்றவளே
முதல் கனவை எனக்கு தந்தவளே
உன் மனத்தை எனக்கு
கொடுத்தவளே