தமிழ் மொழி அல்ல நம் உயிர்

தமிழ் மொழி அல்ல நம் உயிர்
தமிழ் மொழி கொஞ்சிவிளையாடும் பகுதியான புதுக்கோட்டை மாவட்டத்தில் குளிப்பிறை என்னும் கிராமத்தில் பிறந்தவன். நான் பணி நிமித்தமாக தற்பொழுது சென்னையில் வசித்து வருகிறேன். என்னுடைய பெரும்பாலான இளமை காலங்களை நான் கிராம பகுதியிலேயே வாழ்ந்துள்ளேன். ஏன் என்றால் எனது அப்பாவின் தொழில் கிராமத்தை சார்ந்தே இருந்ததால்.

நான் எனது பள்ளி படிப்புகள் அனைத்தும் தமிழ் வழியிலேயே இருந்தன. தமிழ் படிப்பதற்கு கடினமாக தெரியலாம் ஒரு கருத்துக்கு அதிக வார்த்தைகள் இருக்கலாம் ஆனால் அதற்கு உள்ள அழகு வேறு எந்த மொழிக்கும் கிடையாது. நான் படிக்கும் காலத்தில் ஆங்கிலவழி பள்ளிக்கூடம் அத்தி பூத்தது போல அன்கொன்றும் இன்கொன்றுமாக காணப்பட்டது. அன்றய காலகட்டத்தில் ஆங்கில பள்ளியில் படித்தால் அதிக மதிப்பு உண்டு அதே தமிழ் வழியில் படித்தால் மட்டமாக நினைப்பர் அதற்கு மரியாதை இல்லாமல் இருந்தது ஏன் நானே தமிழில் படிப்பது மட்டமாகத்தான் நினைத்தேன் அந்தநிலைக்கு தள்ளப்பட்டேன் கரணம் அன்றய சூழ்நிலைகளே.

ஆங்கிலம் என்றால் அழகு அறிவு என்று பெருமையாக பேசப்பட்டது இன்றும் பேசப்படுகிறது. காலங்கள் இப்படி சென்றுகொண்டருக்கும் நிலையில் நான் எனது பள்ளிப்படிப்பை முடித்தேன். மேற்கொண்டு படிக்க கல்லுரிகளை தேடி ஓட ஆரம்பித்தேன். அந்த கால கட்டத்தில் ஆங்கில வழி என்று சொல்வார்கள் ஆனால் தேர்வுத்தாள்கள் ஆங்கிலத்திலும் இருக்கும் தமிழிலும் இருக்கும் எதில் வேண்டுமானாலும் ஏழுதலாம் இன்றும் பல பல்கலைக்கழகத்தில் அப்படி உள்ளது. ஆனால் நான் முதன் முதலாக சேரஇருந்த கல்லூரி நான் சேர்ந்த வருடம் தன்னாட்சி பெற்றது அதனால் அந்த ஆண்டுமுதல் தமிழுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது தமிழை தவிர அனைத்து பாடங்களையும் ஆங்கிலத்தில் தான் படித்து தேர்வு ஏழுதவேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டது.

கல்லூரியில் சேர்ந்த பல மாணவர்கள் தங்களது பள்ளி படிப்பை தமிழ் வழியில் படித்ததால் ஆங்கிலத்தில் படிக்க முடியாமல் விலகி சென்று அருகில் உள்ள தமிழ் வழி கல்லூரியில் சேர்ந்தனர். ஆனால் நான் வேறு வழி இல்லாமல் சிரமப்பட்டு படித்துவந்தேன். நான் கல்லூரியில் சேர்ந்து மூன்று மாதங்களில் பயிற்சி தேர்வு வைத்தனர் அதில் நான் விலங்கியல் படத்தில் மிக குறைவாக மார்க் வாங்கியதற்காக எனது ஜே.கே.என்னும் பெயர்கொண்ட பேராசிரியர் என்னையும் என் நண்பன் முருகானந்தத்தையும் நிக்கவைத்து வெளுத்து வாங்கினார் நன்றாக உரைக்கும் அளவுக்கு. அன்று ரோசத்தோடு படிக்கத்தொடங்கியவன்தான் அதன் பிறகு அனைத்திலும் முதல் மதிப்பெண்தான் அவரை என்னால் மறக்கமுடியாது. எனது நண்பனை நான் தொடர்புகொள்ளும் பொழுது இன்றும் அந்தநிகழ்வை ஞாபகப்படுத்துவான் அவன் சொல்வான் அவர் கேட்ட கேள்வியால் நீ வாழ்க்கையில் படிப்பில் எங்கயோ போய்டட என்று சொல்வான். அந்த கல்லூரியின் கட்டாயத்தில் நான் ஆங்கிலம் படித்ததால் தான் நான் இன்று பிழைத்து கொண்டுள்ளேன் ஆங்கிலமயமான உலகில்.

நாம் ஆங்கிலயேர்களை அடித்து விரட்டினோம் ஆனால் அவர்கள் சில பழக்கவழக்கத்தையும் மொழியையும் கூடவே வைத்துள்ளோம் நாகரீகம் என்று சொல்லிக்கொண்டு. அவைகளுக்கு அடிமையாகி தமிழை தாய் மொழியை அவமதிக்கின்றோம். பெரும்பாலான இடங்களில் தமிழில் பேசினால் ஏளனமாக பார்க்கிறார்கள். தயவு செய்து ஒன்றை சிந்தித்து பாருங்கள் நமக்காக நாம் வாழ்கிறோம் பிறருக்காக அல்ல மொழி பேசுவதில் நம்மை பிறர் உயர்வாக நினைக்கவேண்டும் என்று ஆங்கிலத்தை நாடுகிறோஅது தவறான செயல்.

நாம் எப்படி நமக்கு விருப்பப்பட்டதை சாப்பிடுகிறோமோ உடை உடுத்துகிறோமா அதை போல நாம் மொழியிலும் அக்கறை கட்டவேண்டும். தாய் மொழி தமிழை தரக்குறைவாக நினைப்பதை தவிர்க்கவேண்டும். நானும் ஒரு காலத்தில் தமிழ் பேசுவதைவிட ஆங்கிலம் பேசுவது சிறப்பு என்று நினைத்தேன் ஆனால் அது தவறு என்பதை நான் இன்று உணர்கிறேன்.

ஆங்கில மொழி உயர்வு என்ற எண்ணத்தை வளர்த்துக்கொண்டதே நாம்தான் அதற்கு காரணம் நம்முடைய தாய்மொழி தமிழை வெறுத்ததால்தான். தமிழால் எதுவும் முடியாது என்று அனைவரது மனதிலும் பதிந்தால்தான் அனைவருக்கும் தமிழ் மீது ஆர்வம் குறைந்தது. தமிழ் மொழி என்பது ஒன்றுதான் ஓசையும் ஒன்றுதான் நடைகள் ஒன்றுதான் ஆனால் பல இடங்களில் அவர்களாகவே வட்டார வழக்காக பல மாற்றங்களை வகுத்துக்கொண்டனர் அவ்வளவுதான் மற்றபடி தமிழ் என்பது ஒன்றுதான் அதில் எந்தவித மாற்றமும் இல்லை.

நான் கல்லூரி படிக்கும் காலங்களில் ஆர்வக்கோளாறில் ஹிந்தியும் படித்துள்ளேன். பல இடங்களை தமிழ் பேசினால் மதிப்புக்கிடையாது ஆங்கிலமோ பிற மொழிகள் பேசினால் மதிப்பு அதிகம் அதை பல இடங்களில் நான் பார்த்து மனம் நொந்திருக்கிறேன். ஏன் சென்னையில் பல நிறுவனங்களில் ஆங்கிலம் தெரிய வில்லை என்றால் குப்பைகொட்டுவது கடினம் சென்னை மட்டுமல்ல பல இடங்களில் அப்படித்தான் இருக்கிறது.

எனக்கு தமிழில் ஒன்றும் பெரிய திறமை கிடையாது ஆனால் தமிழ் மீது உள்ள பற்றால் ஆர்வத்தால் கவிஞர்களின் புத்தகங்களை படிப்பதன் மூலமாக அதன் தாக்கத்தால் தூண்டுதலால் எழுத தொடங்கினேன். நாளடைவில் எனது மேற்கோள்களையும் கவிதைகளையும் மூன்று மொழிகளின் எழுத ஆரம்பித்தேன் அதன் மூலம் தமிழின் மதிப்பு எனக்கு தெளிவுபட ஆரம்பித்தது.

நான் எழுதும் அனைத்தும் முதலில் பிறப்பது தமிழ் மொழியில்தான் தாய் தமிழ்தான் அதில் இருந்து மொழிபெயர்த்து எழுதுவதே ஏன் மொழியில் எழுதுகிறேன் என்றால் நம் தமிழ் மொழியின் சிறப்பு பிறருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக. நான் தமிழ் மீது வைத்த நம்பிக்கை போல் நடந்தது எனது கவிதைகளையும் மேற்கோள்களையும் படித்த பிற மாநிலத்தவர்கள் பலர் என்னை நீங்கள் தமிழனா என்று கேட்க ஆரம்பித்தனர் அப்படி கேட்கும்பொழுது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது. அந்த நேரத்தில் தான் எனக்கு புரிந்தது நம் தாய் மொழி தமிழுக்கு இவ்வளவு அழகு இருக்கிறது என்பது.

நான் பல நேரங்களில் எனது படைப்புகளை மொழி பெயர்க்கும்பொழுது தடுமாறி இருக்கிறேன் தமிழ் மொழிக்கு நிகராக வேறுமொழிகளில் வார்த்தைகள் இல்லையென்பதை பார்த்து. ஏன் உயர்வாக பேசும் ஆங்கிலத்தில் கூட கிடையாது. நான் அழகாக எழுதும் தமிழ் படிப்புகளை மொழி பெயர்ப்பேன் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் ஆனால் முழுமையாக தமிழுக்கு இருக்கும் அழகு அவைகளில் வருவதில்லை பல வார்த்தைகள் முழுங்கப்பட்டுவிடும். நீங்களே வேண்டுமானாலும் சோதித்து பாருங்கள் கணினியில். கூகிள் கூட உண்மையை உரித்து காட்டுகிறது.

மேற்கண்ட ஆய்வுகள் மூலம் ஆராய்ந்து பார்க்கும் பொழுது அனைத்து உலக மொழிகளுக்கும் முதல் தாய் மொழி தமிழ் தான் அதற்கு மேலும் பல சாட்சிகள் உள்ளன. என்னடா இவன் இவன் தாய் மொழியை பெருமையாக பேசுகிறான் என்று நீங்கள் நினைக்கலாம் ஆனால் நான் உண்மையாக உணர்வுபூர்வமாக பலவற்றை பார்த்ததால் அனுபவத்தாலும் மனசாட்சியோடு சொல்கிறேன். நீங்கள் பணம் சம்பாதிக்க வேண்டுமானால் பிறமொழிகளை பயன்படுத்துங்கள் ஆனால் தாய் மொழி தமிழை அளித்துவிடாதீர்கள் அப்படி அழிந்தால் நாமே நம் தாய்க்கு செய்த துரோகமாகிவிடும்.

அன்பு உடன்பிறப்புகளே தயவு செய்து உங்கள் பிள்ளைகளுக்கு தமிழை பற்றி சொல்லிக்கொடுங்கள் அதன் முக்கியத்துவத்தை எடுத்து சொல்லுங்கள் நம் தாயை நமே மதிக்கவிட்டால் யார் மதிப்பார்கள் நீங்களே சொல்லுங்கள். நம் மொழி நம் தாய்மொழி என்பதற்காக சொல்லவில்லை அதன் உன்மையை உணர்ந்ததால் சொல்கிறேன் தமிழில் அனைத்தும் உள்ளது உலகிலேயே முதலில் தோன்றிய மொழி தமிழ் அது தற்காலத்தில் பலரது சூழ்ச்சிகளால் அழிக்கப்பட்டு வருகிறது அதனை தமிழர்களாகிய நாம் இனிவரும் காலங்களில் மீட்டெடுக்கவேண்டும் பிள்ளைகளுக்கு தமிழை ஊட்டி வளர்க்க வேண்டும். வாழ்க தமிழ் வளர்க்க தமிழ் ஓங்குக தமிழ் மொழி உலகெங்கும்.

எழுதியவர் : முத்துக்குமரன் P (22-Aug-21, 2:03 pm)
பார்வை : 223

மேலே