19

என் பிறந்த திகதி 19. சென்ற 2019 ஆம் ஆண்டு எனக்கு மிகவும் பிடித்த ஆண்டு. மீண்டும் 19 ஐக் காண 100 ஆண்டுகள் ஆகுமே. என் வாழ்நாளில் அரிய ஆண்டு என நல்ல கொண்டாட்டம். இது என் ஆண்டு என்று புதிய புதிய எண்குறிகளான ' hash tag ' குகளை உருவாக்கினேன். #cve19, #cv19 #sive19 என பல. அதுதான் உலகம் இறுதியாகவும் சுதந்திரமாகவும் தீநுண்மி ( virus covid -19 ) இன்றி சுற்றிய ஆண்டு என்பதை தற்போது நன்கு அறிவோம்.

ஆசிரியர் என்பதால் ஒருமுறை வகுப்பில் எனது 10 வயது மாணவனிடம் ஏதோ ஒரு கேள்விக்கு 19 என்பதை பதின்ஒன்பது என்று கூறினான். நான் என் வாழ்க்கையில் பத்தொம்போது என்றுதான் கூறி வருகிறேன். வாசித்தும் உள்ளேன். தற்போதய கோவிட்-19 அப்படித்தான் வாசிக்கின்றேன். அவன் சொன்னதைக் கேட்டு, எனக்குள் பல கேள்விகள். நான் மட்டுமா? ஏன் தமிழை எழுதுவதைப் போல் வாசிப்பதில்லை. இரண்டு என்பதை இரண் 'de ' என்றுதான் வாசிக்கின்றோம். இவற்றை விட நம் நல்ல தமிழில் பேசுவதும் இல்லை. ஏன் இந்த நிலை? வேறு மொழிகளில் இதுவரை இதுபோன்று நான் கண்டதில்லை. ஆங்கிலத்தில் அவப்போது சில எழுத்துக்களை உச்சரிக்காது ' silent' என்று விட்டுவிட்டாலும் அவர்கள் பேசுவதற்கும் , சொற்களுக்கும் அதிகம் வேறுபாடுகள் இருக்காது. அச்சிறுவன் நல்ல தமிழ் பேசுகிறான். இல்லை , தமிழில் பேசுகிறான். நாம் தான் தமிழை இரண்டு வெவ்வேறு நாட்டு மொழிகளாக மாற்றி விட்டோம்.

இன்று என்று எழுதினாலும்
இனிக்கி என்று பேசுகின்றேன்.
பேசுகின்றேன் என்று வாசித்தாலும் பேஸ்ரேன் என்றுதான் பேசுகின்றோம்.

வாழ்க என் மொழி,
வளர்க என் நாடு.

#siven19
19

எழுதியவர் : Siven19 (22-Aug-21, 12:20 am)
சேர்த்தது : siven19
பார்வை : 68

மேலே