பகலைபற்றவையுங்கள்
தீக்குளித்தது
தீக்குச்சி
வெளிச்சம்வந்தது
போராடாமல்
பொழுது விடிவதில்லை
தியாகங்கள்தான்
பலதீவட்டிகளை
ஏற்றிவைக்கிறது
மூடத்தனம்விலக
பாடவிளக்கை
பற்றவைக்கவேண்டும்
முட்டாள்தனம்
விட்டோழிய
கல்விகங்கை
மூளையின்மூலையில்
மூட்டம்போடவேண்டும்
நெருப்பால்மட்டுமே
இருட்டுவிலகும்
படிப்பால்மட்டுமே
மூடத்தனத்தின்
முளையழியும்
உலகத்தின்
மூலைமுடுக்கெல்லாம்
தீவட்டியேற்றுங்கள்
அல்லது
தீவட்டியாய்மாறுங்கள்
இருட்டுசாம்ராஜ்ஜியங்கள்
இருந்த
இடந்தெறியாமல்ஒடட்டும்
நெருப்புகள்அணைந்தில்லை
படிப்புகள்ஓய்ந்ததில்லை
பபூதா28.8.21பிற்பகால்1:15