மனிதனும் கனவும்

மனிதனும் கனவும்
காலங்கள் மாறலாம் காட்சிகள் மாறலாம் ஆனால் என்றும் நாம் நாமாகத்தான் கடைசி வரை இந்த உலகில் இருந்து இருக்கிறோம். நான் இந்த சிறுகதையில் நாம் தூக்கத்தில் காணும் கனவின் உண்மை நிலையை சொல்லியுள்ளேன் .

மனிதனுக்கு தான் பிறந்தது முதல் தான் இறக்கும் வரை வாழ்வில் ஆயிரம் ஆசைகள் தோன்றலாம் ஆனால் அனைத்தும் நிறைவேறுவதில்லை. மனிதன் ஆசை படுவது தப்பில்லை ஆனால் வாழ்கை முழுவதுமே ஆசையால் ஜோடித்துக்கொள்வதுதான் தப்பு. அது போல்தான் நாம் காணும் கனவும். நாம் கனவு காண்பது தவறில்லை ஆனால் அந்த கனவு நனவாகும் என்று ஆசைப்படுவதுதான் தப்பு. கனவை கனவாக ஒரு பொழுது போக்கு நிகழ்வு என்று நினைத்து அப்பொழுதே மறந்துவிடவேண்டும்.

கனவு என்பது ஒரு மாயை அவன் நம்மை தொந்தரவு செய்யவந்த ஒரு செயல் அவ்வளவுதான். சாதாரணமா இருக்கும் நம் ஆசைகளை தேவை இன்றி தூண்டவந்த ஒரு மாயை. ஏன் ஆசை காட்டி மோசம் செய்பவன் என்றே சொல்லலாம். இன்னும் சொல்ல போனால் சில தீய கனவுகள் நம் கற்புக்கு களங்கம் விளைவித்து செல்கின்றன. நம்மை தேவை இல்லாமல் காதலில் ஈடுபடுத்தி காமத்திற்கு இழுத்து சென்று காமத்தை தூண்டி அதன் மூலம் நம்மை இன்பம் அடைய செய்து தானாக நம்முடைய விந்துக்களை இழக்க செய்கிறது இதை பார்க்கும் பொழுது கனவு ஒரு காம கொடூரன் தானே.

சிந்தித்து பாருங்கள் கனவு என்பவன் எப்படி பட்ட தீயவன் என்பதை. நீங்கள் நன்றாக சிந்தித்து பாருங்கள் நீங்கள் காணும் ஒவ்வொரு கனவும் இறுதியாக உச்சம் அடையும்பொழுது நம்மை திடீர் என்று விழிக்க செய்கிறான் கனவு ஏன் தெரியுமா அவன் நமக்கு ஞாபகப படுத்துகிறான் நீங்கள் காண்பது கனவுதான் அது ஒரு பொய்யான செயல் அவைகள் எதுவும் நடக்காது என்று சொல்லாமல் சொல்லிவிட்டு செல்கிறான்.

கனவு என்பது நம் தூக்கத்தை நிம்மதியை தேவையற்ற ஆசைகளை தூண்ட வந்த ஒரு அற்பசுகமான ஒருவித பிரம்மையே நிலையில்லா ஒரு சுகமே அதனை மனிதன் நிலைக்கும் என்று ஆசைப்பட்டால் நிஜமாகும் என்று அது நினைத்தாள் அது நடக்காத ஒரு விஷயம். கனவு என்பது நம் தூக்கத்தில் வரும் ஒரு பொழுது போக்கு நிகழ்வு மாதிரிதான் ஒரு சினிமா திரைப்படம் போல்தான். கனவு அனைத்து மனிதர்களுக்கும் வரக்கூடிய ஒரு சாதாரண நிகழ்வு தான். கனவு கூட நம்முடைய மன எண்ணவோட்டத்தை சார்ந்ததுதான் அதன்வழியே தான் பயணிக்கிறது. நம்முடைய கனவை இயக்குவது அதற்கான திரைக்கதை அமைப்பது நாமும் நம் மனமும் தான் காரணம்.

கனவு காணுங்கள் தப்பில்லை ஆனால் அந்த கனவை நினைவாக்கவோ அல்லது நிஜமாகும் என்றோ நம்பாதீர்கள். கனவு என்பது நாம் நம் மனதில் சிந்திக்கும் சிந்தனையில் பிரதிபலிப்பே. நாம் எதை பற்றி அதிகம் சிந்திக்கிறோமே அவைகள் கனவாக வந்து செல்கின்றன.அனைத்திற்கும் நம்முடைய எண்ண சுத்தம் மிக அவசியம். கனவு காண்பது தவறில்லை ஆனால் கனவாகவே வாழ்வதுதான் தவறு. கனவு என்பது கடல் மணலில் கட்ட பட்ட ஒரு மணல் வீடு. கனவை நம்புவது ஒரு மணல் குதிரையை நம்புவதற்கு சமம். கனவு என்பது ஒருவித கானல் நீர்.

கனவை கனவாகவே பாருங்கள் அது ஒரு பொழுதுபோக்கு நிகழ்வு என்று எண்ணுங்கள் கனவை நனவாகும் என்று நம்பாதீர்கள். கனவு என்றும் ஒரு மாயை தான் நினைவாக முடியாது. கனவு என்பதே நம் முடைய மனம் சார்ந்த எண்ணவோட்டங்கள் தான் எனவே மனதை ஒழுங்கு படுத்துங்கள் உண்மையுடன் உழைப்பை நம்பி வாழைக்காயை பயணியுங்கள் வாழ்கை பயணம் சிறப்பாகும் மகிழ்ச்சி வெள்ளம் பெருகும். கனவு என்பது மனம் சார்ந்த எண்ணவோட்டங்களே நம் தூக்கத்திற்கு நண்பன் அவளவுதான்.

எழுதியவர் : முத்துக்குமரன் P (28-Aug-21, 8:20 am)
சேர்த்தது : முத்துக்குமரன் P
பார்வை : 264

மேலே