ஒருநாள் ஒருகனவு

நான் தான் இளவரசி என்னடா

அப்போது ஒரு நாட்டின் இளவரசியா

என நினைக்கா வேண்டாம் என்

பெயர் தான் இளவரசி ஆனால்

வேலை தேடி அலையும் சாதாரண

பட்டதாரி இன்று காலை நான் ஒரு

கம்பெனிக்கு வேலை தேடி போனில்

முன் பணம் ஒரு லட்சம் கட்டிவிட்டு

வேலைக்கு வர சொன்னால் ஒரு

நாள் பிழைப்புக்கு ஒரு ரூபாய்

இல்லாமல் இருக்கிறேம் நான் போய்
ஒரு லட்சம் கட்டுவதா என

நினைத்து கொண்டே வந்தேன்

விட்டிற்கு வந்த உடனே அம்மா

அப்பா வேலை கிடைத்து விட்டதா

என கேட்க.நான் ஆமாம் அது என்

தாத்தா கம்பெனி போன உடனே வா

அம்மா வந்து வேலையை பார் என

சொன்னகாக போ அம்மா போய்

ஏதாவது சாப்பிடா இருந்த கொண்டு

வா.ஏய் என்னடி ஆச்சி.ஒரு லட்சம்

பணம் கேட்டு இருக்காக இருந்த

கொடு பணத்தை கட்டிவிட்டு

வேலைக்கு போறோன் என்னடா

வாழ்க்கை ஒரு வேலை கிடைக்கிறது
உள்ளே நாம் மா உயிரே போய்

விடும்.அப்பா சரி விடு மா வேறு

வேலை தேடி பார்போம். ஆடா போ

அப்பா ஒரு கவர்மெண்ட் வேலை

வேண்டும் என போய் தேர்வு

எழுதினால் அதில் ஆள்மார் ஆட்டம்

தேர்வு முறை கேடு என இதுவும்

வந்து தொலையா மாட்டிக்கிது

அப்பாவி மக்கள் வாழ்க்கையில்

பெரும் பிரச்சனை பணம் தான்

அப்பா.ஆமாம் அம்மா என்ன

செய்வது.அப்பா ஒருவர்

வாழ்க்கையில் பணம், சொந்த விடு

ஒரு வேலை இது இருந்தால்

இப்போதைக்கு அவன் தான்

கோடீஸ்வரன் மாதம் மாதம்

ஒன்றாம் தேதி முதல் பத்தாம் தேதி

வரை வாழ்க்கையில் நரகம் தான்

அப்பா.ஆமாம் டி என்ன செய்வது

நாம்மை போல் இல்லாதவர்

வாழ்க்கை இப்படி தான்.ஆமாம்

அம்மா வாடகை தரவேண்டும்

கரண்ட் பில் கட்ட வேண்டும்

மாளிகைசாமான் வாங்க வேண்டும்

இப்போது குப்பைக்கு கூடா வரி

நூறு ரூபாய் காட்ட வேண்டும் மாதம்
கடவுள் படைத்த இந்த உலகில்

ஆண்கள்,பெண்கள் என இரண்டு

பேரை தான் படைத்தார் ஆனால்

இதில் மனிதன் பணக்காரன், ஏழை

என பிரித்து விட்டான்.ஆமாம் டி நீ

சொன்னது கடவுள் இந்த உலகத்தை

அப்படியே தலை கீழே மாத்த போரரு
வா வந்து சாப்பிட்டு போய் படு மணி

இரவு பத்து.சரி அம்மா வா அப்பா

சாப்பிட்டலாம்.சரி அம்மா என

இளவரசி மற்றும் அப்பா அம்மா என

எல்லோரும் சாப்பிட்டு போய் படுத்து
தூக்கினார்.இளவரசி இடம் ஒரு

தேவதை வந்து உனக்கு என்ன

வேண்டும் சொல்லு இளவரசி

என கேட்க நீங்கள் யார் என இளவரசி
கேட்க நான் ஒரு தேவதை உன்

ஆசையை சொல்லு நான்

நிறைவேற்றுகிறேன். நிஜாமா என

கேட்க. ஆமாம் அப்படி என்றால்

எனக்கு ஒரு நிரந்தர வேலை

வேண்டும்.நான் ஆசை பட்டது போல

ஒரு அழகான விடு கட்ட வேண்டும்

பணம் இல்லை என்ற தொல்லை

எப்போதும் இருக்க கூடாது

அப்பா,அம்மா மனம்

எப்போதும் வருந்த கூடாது அவர்கள்

எப்போதும் நலமுடன் இருக்க

வேண்டும்.இதை விட முக்கியம் என்

மனம் ஒரு போதும் பணம் வந்த

உடனே மாறி விட கூடாது திமிரு,

ஆணவம் என எதுவும் இருக்க

கூடாது எல்லோருக்கும் உதவும்

மனம் இருக்க வேண்டும்.போதுமா

இளவரசி என தேவதை கேட்க.

போதும் தேவதை என சொல்ல

தேவதையே நீ எனக்கு மட்டும் நான்

ஆசை பட்டதை தராமல் என்னை

போல் கஷ்ட படும் எல்லோருக்கும்

அவர் அவர் ஆசையை நிறைவேற்று

தேவதையே. சரி இளவரசி நீ

சொன்னதை எல்லாம் செய்கிறேன்

உனக்கு சீக்கிரம் வேலை கிடைக்கும்

நீ கவலை படதே.சரி தேவதையே

நீ எனக்கு ஆசையை பொறுமையாக

நிறைவேற்று ஆனால் அடிக்கடி

கனவில் வந்து பேசு அதுவே எனக்கு

போதும் என் மனம் இப்போது புது

தெம்பு வந்து இருக்கு நான் இனி

உன்னிடம் கேட்டது எல்லாம் நானே

வேலை தேடி சம்பாதித்து நிஜமான

இளவரசியாக வாழ்ந்து கட்டுவேன்

தேவதையே.இதை தான் நான்

உன்னிடத்தில் எதிர்பார்த்தேன்

இளவரசி உன் மனம் வேலை

கிடைக்காமல் நீ கஷ்டப்படுவதை

பார்த்து உனக்கு நம்பிக்கை கொடுக்க
வந்தேன் இளவரசி நீ ஆசைப்பட்ட

எல்லாம் உனக்கு கிடைக்கும் நான்

வருகிறேன் என தேவதை சென்று

விட்டது. இளவரசி கனவு கலைந்து

விட்டது புது விடியல் பிறந்து

விட்டது இளவரசி மனதில் ஏதோ

ஒரு சந்தோசம் பிறந்து விட்டது

புது வேலை தேடி இளவரசி

புறப்பட்டு சென்றால் தான்

கனவுகளை தான் நெஞ்சில்

சுமந்தால் நம்பிக்கையை தான்

பாதையில் வைத்தால் இளவரசியின்

ஆசைகள் வேலை, சொந்த விடு,

பணம்,இது தான் அவள் ஆசைகள்

அவளுக்கு மட்டும் இல்லை இன்று

வாழும் அனைவருக்கும் இந்த ஆசை

இருக்கிறது எல்லோருக்கும் இது

கண்டிப்பாக நடக்கும் அவர் அவர்

ஆசைகள் எல்லாம் நடக்கும்

நம்பிக்கை உடனே நாம் செய்யும்

செயல் நல்லதாகவே நடக்கும்

நாம் கண்ட கனவுகள் எல்லாம்

பழிக்கும் ஒரு நாள் ஒரு கனவு

என எல்லா நல்ல கனவுகள்

பழிக்கும் நெஞ்சம் சந்தோசத்தில்

பறக்கும் நாம் கஷ்டங்கள் எல்லாம்

மறையும் எல்லோரது கனவிலும்

தேவதைகள் வராது நாம் வாழ்க்கை

வாழ்வது நாம் கையில் தான்

இருக்கிறது சந்தோசம் நாம்மை

நோக்கிவருகிறது.

எழுதியவர் : தாரா (27-Aug-21, 11:45 pm)
சேர்த்தது : Thara
பார்வை : 244

மேலே