தூக்கம் இறப்பு சொர்க்கம்
தூக்கம்/ இறப்பு/ சொர்க்கம்.
அதோ பார், வருகிறான் சிவன். நாங்கள் அவருக்காக இங்கு அரை மணித்தியாலம் மேல் காத்துக் கொண்டு இருக்கிறோம் அவனோ ஆடி அசைந்து வருகிறான் எருமையாட்டம். இப்படி சொல்வது போல் என் மனதில் பட்டது.
அருகில் சென்றதும் ஒருவன் சொல்லியே விட்டான் நான் எருமை
மாடு என்று.
கோபிக்காதேடா மச்சான்.
நான் சொர்க்கம்
போனேன், திரும்பி வர விருப்பம் இல்லாமல் வந்தேன் என்றேன்
அவனிடம். இப்படி நான் சொல்ல இன்னொருவன்
கேட்டான், உங்களுக்கு எல்லாம் புரியுதாடா அவன் சொல்கின்ற சொர்க்கம் என்ன என்று.
அவனுக்கு அவருடைய
தூக்கம் ஒரு சொர்க்கமாம். ரம்பை என்ன ஊர்வசியும் சேர்ந்தே அவரைக் கொஞ்சுவார்களாம் என்றவன், நேரமாச்சு வாங்கடா கிளம்புவோம்
என்று சொல்ல நாங்கள் எல்லோரும் அந்த விடிஞ்சும் விடியாத நேரத்தில் எங்கள்
சுற்றுலாப் பயணத்தை ஆரம்பித்தோம்.
உடம்மோ சொர்க்கத்தை விட்டு வருகிறாப் போல இல்லை . என் அம்மாவைக் கேட்டால் சொல்வாங்க ஏன் தூக்கம் = சொர்க்கம் என்று.
அப்பா இறந்த பின்பு எங்களை எல்லாம் எப்படி வளர்த்து ஆளாக்கப் போகிறோமோ என்று சதா நினைத்ததால் என்னவோ இம்மியும் தூங்க முடியாமல் ஒரு கட்டத்தில் அம்மா கஷ்டப்பட்டவங்க இப்ப எல்லாம் அவங்க ஒரு அரையோ, ஒன்றோ படுக்கிறதற்கு முன்பு வாயில் போட்டு தண்ணீர் ஊத்தி விடுவாங்க. அரை மணி நேரத்திற்கு பிறகு என்னை சொர்க்கம் அழைக்கிறது good night என்று சொல்லி விட்டுப் போனால் அம்மாவை காலையில் எழுப்புவது என்னவள் தான்.
அம்மா தூக்கமில்லாமல் பட்ட கஷ்டத்தை பார்த்த நான், யோசிப்பேன் சில நாட்களில், ஏன் ஒரு ஆறு அல்லது எட்டு மணி நேரம் மரக்கட்டை மாதிரி தூங்கிவிட்டு எழும்பும் நாட்களில் எல்லாம் எனக்கு சொர்க்கம் சென்று திரும்பிய மாதிரி இருப்பதென்று.
ஒரு நல்ல தூக்கம் சொர்க்கத்துக்கு சென்று திரும்புவதற்கு சமன் என்று சொன்ன நான்
இதையும் இப்பவே சொல்லிவிடுகிறேன்.
கோபிக்காதீங்கள்.
கற்பனை பண்ணிப் பாருங்கள். அந்த ஆறு அல்லது எட்டு மணி நேரத் தூக்கமே எப்படி சொர்க்கத்திற்கு சென்று திரும்பியது போல் இருக்கும் என்றால் , திரும்பாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று. சரி ஒரு கதைக்கு அப்படித்தான் நடந்தது என்றும் எடுத்துக் கொள்வொம். அப்ப புரியும் இறப்பு = சொர்க்கம் என்ற எனது தத்துவத்தை. தூக்கம் இரு வழிப்பயணம் என்றால் இறப்பு ஒரு வழிபயணம். அவ்வளவு தான் வித்யாசம். இதில் பெரிசாக அலட்டிக் கொள்ள என்ன இருக்கிறது. நீங்கள் தூங்கி சொர்க்கம் சென்றால் மனைவி உங்களை கூட்டி வருவாள்.
இறந்து சொர்க்கம் போனால் உங்கள் மனைவி ஊரைக் கூட்டி அழுவாள். அவ்வளவு தான்.
இந்த எனது யதாத்தத்திற்கு ஆமாம் போட எத்தனையோ வயது வந்த ஜீவன்கள் உலகில் இருக்கவே இருப்பார்கள். அதேபோல்
இவன் கதைப்பதே சரியில்ல, இது ஒரு அரைப் பயித்தியம், தானும் ஒரு புத்தர் என்று நினைத்து எதோவெல்லாம் அலட்டுது
என்பவர்களும் இருப்பவே
இருப்பார்கள்.
அது சரி இப்ப நான் எதற்கு ஒரு " விழியாத் தூக்கமே இறப்பு ' என்று சொல்லவேண்டும். அப்படி நான் சொன்னதற்கு உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். ஆனால் இதற்கு,
தூக்கம் = சொர்க்கம்
என்று சொன்னதற்கு மன்னிப்பு கேட்கவே கேட்கமாட்டேன்.
ஏன்? சொல்கிறேன் கேளுங்கள். உங்களில் பலர் படித்தும் கேட்டும் இருப்பீர்கள்..
தூக்கதில் தான் எனக்கு இந்தக் கவிதை/ கதை /கண்டுபிடிப்பு / ..... எல்லாம் பிறந்திச்சு என்று சொன்ன பல பிரபலங்களை. அப்ப இதற்கு என்ன அர்த்தம். சொற்கத்தில் இறைவன் இவர்களுக்கு கொடுத்து அனுப்பியது தான் அந்தக் கவிதை/கதை/ கண்டு பிடிப்பு/.. . எல்லாம். யாருக்கு தெரியும் அந்த உலகப் புகழ் பெற்ற ஆக்கிமிடீஸ் (Archimedes,)
என்ற விஞ்ஞானியும்
இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு அரசன் கேட்ட கேள்விக்கு விடை கண்டு பிடித்து விட்டேன் ( ureka ureka) என்று உடம்பில் ஒரு ஆடையும் இன்றி ஏதென்ஸ் (Ethens)
நகர வீதிகளில் ஓட முன்பு அவனும் தூங்கி சொர்க்கம் சென்று இறைவனைப் பார்த்து வந்தவனோ இல்லையோ என்று !!.
ஆக்கம்
சண்டியூர் பாலன்.