கிமேஷ்

மூத்த பையன் பேரை நீங்கதான் பெரியப்பா வச்சீங்க. அவனுக்கு வயசு மூணு ஆகுது. மழலையர் வகுப்பில் அவனைச் சேர்ககணும். வருசத்துக்கு ஐம்பாதியரம் கட்டணமாம். சத்தான மதிய உணவு, , முட்டை, பால் தர்றாங்களாம். அதுக்கு இருபதாயிரம் கட்டணும்.
@@@@@@
ஏன்டப்பா கணேசு....,
@@@@@
சொல்லுங்க பெரியப்பா.
@@@@@@
எதுக்கு அந்தப் பள்ளில அவ்வளவு பணம் கட்டி அந்தப் பள்ளில சேக்கற? உன் மனைவியே ஆசிரியர் பயிற்சில தங்கப் பதக்கம் வாங்கிப் பட்டம் வாங்கினவ. நீ நம்ம பகுதியிலேயே பெரிய பணக்காரன். வீட்டுக்குப் பக்கத்திலயே 3,600 சதுர அடி காலி மனை வச்சிருக்கிற. அதில மழலையர் பள்ளிக்கேற்ற கட்டடத்தைக் கட்டி மத்த வசதிகளையும் செஞ்சு உன் மனைவியை நிர்வாகியாப் போட்டு ஒரு மழலையர் பள்ளி உங்கப்பா பேருல ஆரம்பிச்சு வருசத்து பத்தாயிரம் ரூபாய் கட்டணம்னு விளம்பரம் செய்டா. நம்ம பகுதி அதைச் சுற்றியுள்ள பகுதிகள்ல இருந்து ஐநூறு கொழந்தைகளாவது வருவாங்க. நடுத்தர மக்களுக்கு சேவை செஞ்ச மாதிரி இருக்கும். உனக்கும் நல்ல பேரு கிடைக்கும்.
@@@@@@@
சரிங்க பெரியப்பா. அது போலவே செய்யறேன். சரி. எனக்கு கணேஷ்னு பேரு வச்சீங்க. என்னோட மூத்த பையனுக்கு "ரமேஷ்"னு பேரு வச்சீங்க.
@@@@@@
ஆமாம். போன வாரம் பொறந்த உன் (இ)ரண்டாவது பையனுக்கு நான் பேரு வைக்கணும். அதுதானே உன்னோட ஆசை.
@@@@@@
ஆமாங்க பெரியப்பா.
@@@@@
உம் பேரு கணேசு. விநாயகர் பேரு. 'ரமேசு'க்கு என்ன அர்த்தம்டா கணேசு.
@@@@@@
தெரியலீங்க பெரியப்பா.
@@@@@@
எனக்கும் தெரியாதுடா கணேசு. நெறைய சனங்க அவுங்க பிள்ளைங்களுக்கு அர்த்தம் தெரியாத இந்திப் பேரு மாதிரி இருக்கிற பேருங்கள அவுங்களே உருவாக்கி வச்சிடறாங்க. அதனால உன்னோட போன வாரம் பொறந்த உம் பையனுக்கு 'கிமேஷ்'னு பேரு வைடா கணேசு. நம்ம சென்னை மாநகரித்தில யாருமே அந்தப் பேரை

எழுதியவர் : (28-Aug-21, 7:38 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 47

மேலே