தாடியர்

தாடியர்

இவர் இருக்கிறாரே, அவர் தான் தாடியர்.... பலருக்கு அவர் பெயர் தெரியாது. பெரிய தாடி இருந்ததாலே அவர் தாடியராகிவிட்டார்.
கிராமத்தில் இது சகயம்.
ஏன் பாருங்கள் என் பூட்டனாருக்கு மக்கள் இட்ட பெயர் கம்பு ஓட்டி நமசிவாயம். எப்படி இந்தக் கம்பு அவரோடு வந்து
ஒட்டிய கதை கேட்பதற்கு மிகவும் சுவையாக இருக்கும். அதை இன்னொரு நாளைக்கு பார்ப்போம். இப்ப இந்த தாடியரைப் போய்ப் பார்ப்போம் வாருங்கள்.

இந்த தாடியர் வெள்ளைக்
காரன் விட்டுப்போன துவக்கு ஒன்றை வைத்துக் கொண்டு என்ன சண்டித்தனம். ஊர்ப் பெயருக்கு ஏத்தாப்போல. எதற்கெடுத்தாலும் துவக்கை தூக்கிக் கொள்வார். சுட்டுப் போடுவேன் ஓடி விடு என்பார். மக்களும் ஏன் வம்பு என்று அவரிடம் இருந்து ஒதுங்கி இருந்தார்கள். ஏன் நான் கேள்விப்பட்டதில் அவர் குடும்பமும் அவரிடம் இருந்து சற்று விலகியே நின்றது. ஊராரின் வாயை மூடுவதற்காக மூடி போட்டு வாழ்ந்தார்கள்.

தாடியரும் வாழ்ந்தார். பகை வளர்த்தார். அவருக்கு தெரியாது அந்தப் பகை ஒருநாள் காலனாக மாறி அவருடைய கதையை முடித்து விடும் என்று.
இறைவன் அல்வ அது. அவருடைய நெருங்கிய உறவுக்காரன் தான் காலன் வேஷம் போட்டது.

அவருடைய பட்டப்.பெயர் கறுவல்.உங்களுக்கு நான் அவருடைய பெயரை சொல்ல விருப்பமில்லை.
என்னுடைய கிராமத்தில் அதுதான் சண்டிலிப்பாயில் அப்போது இன்னும் இரண்டு பேர் இவருடைய பெயரை ஒத்து. அவர்களும் பட்டம் வாங்கியவர்கள் தான்.. ஒருவருக்கு மக்கள் கொடுத்த பட்டம் "சிவலை"
மற்றவருக்கோ " லோட்டி " இங்க ஒரு விடயம் சொல்ல விரும்புகிறேன், கிராமத்து மக்கள் எப்பவுமே அறிவாளிகள். பட்டப் பெயர் சூட்டாவிட்டால் குளறு படியில்லாமல் அவர்களைப்பற்றி கதைப்பது கஷ்டம் என்று.
யார் சொன்னது அவர்களை
எல்லாம் village pumpkins என்று. அது நிச்சயம் நான் இல்லை.எப்படி
சொல்வேன் நான் அதை . எனது எண்ணத்தில் எப்பவுமே இருப்பவர்கள் மூவர். அப்துல் கலாம், பட்மான் அருணாசலம் , mountain man மன்ஜி.
இவர்களை எல்லாம் ஆங்கிலத்தில் சொல்லப் போனால் village pumpkins
அல்லவா.

இந்த தாடியருக்கும்
கறுவலுக்கும் இடையில் எப்படித்தான் பக வளர்ந்தது என்று யாருக்கும் தெரியாது. அதுவும் கறுவலுடைய மனைவி தாடியருடைய தங்கை.

ஒரு காலத்தில் இருவருமே ஒரு கோப்பையில் சாப்பிட்டு
ஒன்றாகவே கள்ளை ருசித்தவர்கள். ஏன் toddy tasters என்று சொல்வோமே. அதில் என்ன தப்பு. Australia ல் இவர்களுக்கு wine tasters என்று பெயர். அங்கு கள்ளில்லை அவ்வளவுதான் வித்தியாசம்.
தாடியருக்கு இரண்டு பெண்ணும் ஒரு ஆணும். ஆண்மகன் அவரைப்போல
சண்டித்தனம். ஆனால் காலம் மாறியதாலே ஒரு சிலர் அவனுக்கு இரண்டு சாத்தி விட தயங்கமாட்டார்.
மூத்தவள் சிவப்பி தாய்மாதிரி. அழகானவள்.
சண்டியூர் காளை ஒருவன் தாடியரின் விருப்பத்துடன் கூட்டிச் சென்றுவிட்டான்.
மற்றவரும் அழகில் குறைந்தவள் இல்லை.
கொஞ்சம் கறுப்பு. ஆனாலும் அவளும் நல்ல பிள்ளை. ஏதோ ஒரு இடத்தில் வேலை பார்த்து வந்தாள். அந்த வேலையின் காரணமாக அவளால் சேலை அணிந்து செல்ல முடிவதில்லை.
அதனாலே ஊரிலை சிலர்?
அதை விடுங்க. தாடியருக்கு இதாலே கொஞ்சம் கவலைதான். முன்பு போல் அவருக்கு யாரும் இப்போ பயப் படுவதுமில்லை. இளசுகளுக்கு அவரைப் பற்றி அவ்வளவு தெரியாது. மற்று ஒரு விடயம். அவருடைய துப்பாக்கியும் துருப்பிடித்துவிட்டது. அவர் மகனோ நான் உங்களுக்கு சொன்ன மாதிரி ஒரு உதவாக்காரன். ஆனால் தங்கையை வேலைக்கு கூட்டிச் சென்று கூட்டி வருவான் துணையாக.
அவருக்கு வேறு வழி இல்லை. மகளை வேலைக்கு அனுப்பினால் தான் வீட்டில் அடுப்பு எரியும் என்ற நிலை. மற்றும் படி தாடியர் வேளா வேளைக்கு சாப்பிட்டு easy chair சாய்ந்தபடி பத்திரிகை படித்து மகிழ்வோடு
காலத்தை ஓட்டிக் கொண்டு இருந்தார்.

நான் இப்ப உங்களுக்கு தாடியரைப் பற்றி ஒன்றும் விடாமல் சொல்லிப்
போட்டேன். இப்ப கொஞ்சம் பார்ப்போம் கறுவலைப்
பற்றி. பெரிதாக ஒன்றும் சொல்வதற்கில்லை. பார்ப்பதற்கு கறுப்பாகவே இருந்தார். யாரும் அவர் நிறத்தை சுட்டி பேசினால் தான் ஒரு சுத்த தமிழன் என்பார். அத்துடன் சேர்த்தே சிலசமயங்களில் நீ வெள்ளையாய் இருக்கிறாய் உன் கொப்பன் மாதிரி.
அவரைப் போலவே நீயும் அசிங்கமாக இருக்கிறாய் என்று சொல்லி அடிதடி பட்டு இருக்கிறார்.

கறுவல் சபாரட்ணம் படித்தவர். அரசாங்கத்தில் நல்ல உத்தியோகத்தில் இருந்தவர். இப்போ அவருக்கு அவருடைய பென்சன் அவர் தேவைக்கு
அதிகம் தான். அவர் பிள்ளைகள் படித்து திருமணம் ஆகி போய்விட்டார்கள். மனைவியும் காலமாகி சில வருடங்களாகிறது. தனிமை தான் அவரை வாட்டியது.
அப்படிப்பட்ட ஒருநாள் மதிய நேரம் வளமை போல் அவர் விரும்பி அருந்தும் காலையில் இறக்கிய வெள்ளையில் இரண்டு போத்தல் போட்டுக் கொண்டார். இன்று வழக்கத்துக்கு மாறாக அதன் விளைவு தலைக்கு ஏறிவிட்டது. கள்ளு வார்த்தவனிடம் கேட்டு இருந்தார். ஏன்டா கந்தன் இன்று கள்ளு வழமை மாதிரி இல்லை. கொஞ்சம் கூடப் புளித்து மணகிது.
அதற்கு அவன் ஐயா வெளியிலே பாருங்கோ என்ன வெயில் என்று சொல்லி சமாளித்தான். சரி பராவாயில்லை என்று குடித்ததின் விளைவு அவருக்கு இவ்வளவு நாளும் மறந்திருந்த விடயங்கள் மனதில் வந்து வந்து ஏதோ செய்தது. அவருடைய வீட்டிற்கு போகிற வழியில் தான் தாடியரின் வீடும். சத்தமில்லாமல் எட்டிப் பார்த்தார். மதியம் சாப்பிட்டு விட்டு அவருடைய easy chair தாடியர் கணபதிப்பிள்ளை கண் அயர்ந்து கொண்டு இருந்தார். கறுவலுக்கு என்ன பிடித்ததோ தெரியாது
உள்ளே சத்தமில்லாமல் புகுந்து அங்கு அவர் கண்ணுக்கு அகப்பட்ட உலக்கையால் இரண்டு தாடியரின் மண்டையில் வைத்தார். கதை முடிந்தது தாடியின். கறுவலின் மனதில் அவருக்கே புரியாத ஒரு மன அமைதி. தலையை ஆட்கொண்டிருந்த கள்ளின்
விளைவும் சற்று தணிந்து இருந்தது. புரிந்து கொண்டார் தான் செய்த பிழையை. ஓடி ஒளிக்காமல் காவல் நிலையத்தில் தன்னை ஒப்படைத்தார்.

இதுவே எனது கிராமத்தில் எனக்கு தெரிய நடந்த முதல் விபரீதம். அப்போ எனக்கு வயது ஒன்பது. பள்ளியில் இருந்தேன். பள்ளிக்கு வெளியில் ஊர் ஜனங்கள் கூடிப் பேசிய காட்சி இன்றும் கண் முன்னால் நிற்கிறது.
நான் ஊரை விட்டு, வெளி ஊர் செல்லும் வரை பெரிதாக சொல்வதற்கு என்று ஒன்றும் அங்கு நடக்கவில்லை. அப்படி நடந்திருந்தால் விசாரித்து உங்களுக்கு எழுதி நிச்சயமாக சொல்வேன்.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (29-Aug-21, 1:52 pm)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
பார்வை : 89

மேலே