கல் தொட்டி - காணவில்லை

முன்னுறையையும் ; விளக்கஉரையையும் தவிர்த்து கதைக்குள் செல்வோம்.

2016
வேலை நிமித்தமாக இடம் பெயர்ந்த காலம்.
சூழலும் சுற்றமும் பொருந்திவரவும்; என்னை பொருதிகொள்ளவும் அவகாசம் தேவைப்பட,
எனக்கென நான் எதையும் முன்னெடுக்(க)காத (பயந்த) காலம்.

தற்காலிகமாக நண்பர் ஒருவர் வீட்டில் தஞ்சமடைந்தேன்.
திருமணமாகி அது கசந்ததால் அவர் தனியாக வசித்து வந்தார்.
எனவே அவர் என்னை அடைகலப்படுத்த பெரிதும் யோசிக்கவில்லை.
அவருக்கும் பேச்சு துணைக்கு ஆள் தேவைப்படுமல்லாவா!!

நாங்கள் ஒருவரையொருவர் காண்பதும் , பரஸ்பரம் விசாரித்துக்கொள்வதும் இரவு தூங்க செல்லும் முன் தான்.
அவர் சம்பாத்தியத்தையும்,அதன் வழி கூற்றையும் உற்று நோக்கியப்படியால் ; மற்றவை எதையும் அவர் நோக்கியபாடுமில்லை; கவலை கொண்டதும் இல்லை!

அன்று வேலை முடிந்து வீடு திரும்பினேன்.கதவு திறந்து கிடந்தது,
பயந்து உள்ளே சென்றேன்.நாற்காலியில் முதியவர் ஒருவர் அமர்ந்திருக்க
யார்?? என வினவினேன்.
நண்பரின் "அப்பா" என தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.

பரஸ்பரங்கள்,விசாரிப்புகள் முடிய குளித்து முடித்து இரவு சாப்பிட செல்ல தயாரானேன்.
நீங்க சாப்டிங்களா?? என்றேன் முதியவரிடம்.
"பையன் எதுனா வாங்கி வருவான்" - என்றார்.
நான் சென்று உணவு உண்டு வீடு திரும்பி சிறிது உலலாத்தல் முடிந்து தூங்கச்சென்றேன்.

மீண்டும் காலை தினசரி சுழற்சி!
அலுவலகம் செல்ல ஆயத்தம் ஆன நண்பரிடம் " அப்பா வந்திருக்கார் , லீவு போடலயா?? என்றேன்.
"அவர் வந்தா அவர் இருக்கட்டும்" - என்றார் நான் அதிர்ச்சி அடைய!
எனினும் தயக்கத்துடன் "அவருக்கு சாப்பிட?? என்று அடுத்த கேள்வியை முன் வைத்தேன்.
"அதெல்லாம் அவர் பாத்துபார்" என்று அடுத்த பதிலும் அதிர்வை உண்டாக்க; நான் அலுவலகம் கிளம்பிவிட்டேன்.

மாலை வீடு திரும்பியதும் அதே முன் தின மாலையின் சுழற்சி.
ஆனால் இம்முறை முதியவரிடம் "சாப்பிட போலாம் வாங்க" என்றேன்.
அவரும் என்னுடன் நடந்தார்.
உரையாடினோம்!!
அதில் நான் தெரிந்துக்கொண்டது முன் தின இரவு "பையன் எதுவும் வாங்கி வரவில்லை" அப்பா சாப்பிட!
இவர் தன் கையில் இருந்த வாழைப்பழங்களில் இரண்டை உண்டு பசியாற ; மேஜை மேல் இரண்டு பழங்களை வைத்து விட்டு தூங்கச்சென்றிருக்கிறார் மகனுக்காக !!



உணவு விடுதியில்..

நாங்கள் குஸ்காவையும் ; தோசையையும் எங்கள் உரையாடலுடன் சேர்ந்து பகிர்ந்து கொண்டோம்.
இது எங்கள் அன்றாட நிகழ்வாக மாறியது.
எனக்காக அவர் காத்திருப்பார்!
உணவு உண்ண செல்வோம்!!
சில நேரம் வேண்டாம் என்பார்!!!
நான் கட்டாயைப்படுத்தி அழைத்து செல்வேன் அல்லது வாங்கி வந்துவிடுவேன்!

அந்த ஞாயிற்றுக்கிழமையின் மதிய வேளையில் நாங்கள் எங்கள் உரையாடல் ஆழமெடுத்தது.

அவர் வயது 84!
இரு மகன்கள் ; ஒரு மகள்!!
மனைவி இல்லை!!!
அதான் காரணமா?? அவர் எங்கேயும் ஒட்டிய பாடில்லை.

இந்த ஊர் வர அவரது பயண அட்டையை பாருங்கள்!

அவர் ஊர் - டவுன் பஸ் ஸ்டாண்டு - மினி பஸ்,
டவுன் பஸ் ஸ்டாண்டு - மதிய பேருந்து நிலையம் - ரூட் பஸ்,
மாவட்ட எல்லைகளை கடக்க மஇஃப்சல் பஸ்,
மாவட்ட எல்லைகளை கடந்த பின் - மீண்டும் ரூட் பஸ்,
பஸ் ஸ்டாப் - வீடு - 15 நிமிட நடை பயணம்!!

இப்படி பஸ் மாறி மாறி இந்த வயசுல என் அலயரீங்க?? என்றேன்
எப்பா இளையவன் தனியா இருகானல் - அவன அப்ப அப்ப வந்து பாத்து போகனும்ல !! - என்றார்
மேலும் தொடர்கையில்,
"அவன் என் மேல கோவத்துல இருக்கான், பாத்து பாத்து கல்யாணம் பண்ணி வெச்சி அது நோடிஞ்சி போச்சு, அதுக்காக அவன தனியா விட்டுட முடியாதுல்ல!! என்றார்.

மேலும்..

நான் ஒரு விவசாயி!
காவிரி படுகை ஓரமா நம்ம வெள்ளாமை!
நம்ம வீட்டுல மாடு கன்னு; ஆடு குட்டி ; கோழி குஞ்சு சகலமும் உண்டு.
விட்ட சுத்தி தென்னை மரம், வாசல்ல விழுந்த காய் பொறுக்குனா ஊருக்கே எண்ணெய் எடுக்கலாம்!!
மாடு கன்னு பசியாற,தாகமாற பண்ண நெடுக்க "கல் தொட்டி"

"மவராசி போன பிற்பாடு இருந்த எல்லாத்தையும் சமபகுதிய மூணு பிள்ளைகளுக்கும் பிரிச்சி குடுத்துட்டேன்,
பொம்பள புள்ளைக்கி - அத்தா நகை
பெரியவனுக்கு - பண்ணையும் வயலும்,
இளயவனுக்கு - வீடும் நெலமும் மா !!! என்றார்.

இவனுக்கு தான் கல்யாண வாழ்க்கை இப்படி ஆய் போச்சு !
என்னனு தான் காரணம் காண முடியல!!
யாரோ எதோ செஞ்சி வெச்சிட்டாங்கப்பா!! என்றார்

சரி ஊர்ல எங்க இருக்கீங்க ?? என்றேன்.
இளையவன் பேர்ல இருக்க வீட்ல!! - என்றார்
சாப்பாட்டுக்கு ?? என்றேன்
அப்ப அப்ப மக எதுனா கொண்டு வந்து குடுப்பா இல்லனா கடை பலகாரம் தான்!! - என்றார்
நான் ஒரே எடத்துல இருந்த மருவாதை இருக்காதுனு இப்படி மக மங்கனுங்க வீட்டுக்கு தாவிக்கிட்டு இருக்கேன் - என்றார்.

அன்று அலுவலகம் விட்டு வீடு வந்தேன்,என்னை எதிர் நோகியவராய் "வாப்பா ! இன்னைக்கு சீக்கிரம் சாப்பிட போலாம் " - என்றார் - சென்றோம்!!
சாப்பிடும் வரை அமைதி காத்தவர் வீடு அடைந்ததும் "நாளைக்கு ஊருக்கு கெளம்பறேன்" - என்றார்

ஏன் என்னாச்சு?? என்றேன்
"இல்லப்பா இளயவனுக்கு குல சாமி கோவில்ல போய் குறி கேக்கணும்,அவன் வாழ்கையை சீர் செய்யனும்" - என்றார் அந்த 84கு வயது தந்தை 40ஐ கடந்த மகனை நினைத்து.

மறுநாள்..என்னை நோக்கி

"அடுத்த தடவ இங்க வர உயிரோட இருப்பனானு தெரியல !! இருந்த பாப்போம்!!! - என்றார்

இன்றளவும் அவரது நினைவுகளை அசைபோடுகையில் என் எண்ணத்தில் தோன்றுபவை இவைதான்,

தன்னை தானே ஒரு "கல் தொட்டியாக"
செதுக்கி தன் பிள்ளைகள் தாகமாற,பசியாறவைத்த அந்த விவசாயி முதியவர் ; அவ்வபோது மகள் , மகன்களிடம் இடம் பெயர்ந்தது மரியாதை நிமித்தமாகவா?? அல்லது பசி "ஆறுதல்" காகவா???

அது அந்த பிள்ளைகளுக்கு தான் வெளிச்சம்!!!

சில மாதங்களுக்கு முன்பு அவர் இறந்த செய்தி என்னை வந்தாடைந்தது!!!
அவர் செதுக்கிய கல் தொட்டிகளை போல அவரும் மண்ணில் புதைந்துவிட்டார் !!!

காணவில்லை!

இனி அதையும் அவரையும் தேடி பயனில்லை!!

நினைவுகள் நீங்கவில்லை!!!

- தினேஷ் ஜாக்குலின்

எழுதியவர் : - தினேஷ் ஜாக்குலின் (30-Aug-21, 3:12 am)
பார்வை : 206

மேலே